பாதங்கள் போதும்!
வண்ணங்களை சலவை செய்ய சம்மதிப்பதில்லை வானவில் மழையிடம் முட்களில் அமர்ந்திருந்தபோது சிரித்த ரோஜா பறித்ததும் வாடியது இரைகளுக்காக இறக்கைகளை பறிகொடுப்பதில்லை எப்போதும் பறவைகள் வீழ்ந்ததற்காக தேங்கிவிடுவதில்லை ஒருபோதும் அருவி நடப்பதற்கும் கடப்பதற்கும் பாதைகள் எதற்குப் புதிதாய்? பாதங்கள் போதும்!