அந்த ஒரு ரயில் பயணம்
நல்ல மாலை பொழுது. வழக்கம் போல நான் நொந்து நூடில்ஸ் ஆகி போய் இருந்தேன். அலைச்சல் உலசச்சல் குடைச்சல் எல்லாம் என்னை கடுப்பேத்தி அமைதியா ஓரமா ஒரு இடம் கிடைச்சா போதும்னு இருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சி சில பல இடம் காலி ஆக ஒரு சீட்டோட ஓரத்துல நான் உட்கார அந்த சீட்டோட ஜன்னல் ஓரமா ஒரு 45 வயசு மதிக்க தக்க ஒரு அம்மா உக்காந்திருந்தாங்க. எல்லாம் இறங்க அவங்க மடியில தூங்கீகிட்டு இருந்த பையன மெதுவா இழுத்து கால் நீட்டி படுக்க வச்சிட்டு அவங்க தள்ளி தள்ளி உக்கார வந்தாங்க. சரி சண்டை வர போகுது வெலகு வெலகுனு அடுத்த சீட்ல போய் உக்காந்துட்டேன். சமீப காலமா யாராச்சும் அநியாயமா எதாச்சும் செஞ்சா செம கோவம் வந்து எதாச்சும் சொல்லீடறேன். அப்டிலாம் இல்லாம பொறுத்து அமைதியா இருக்கணும்னு எனக்கு நானே சொல்லிகிட்டத சரியா பாலொவ் பண்ணலாம்னு இருந்தேன். இன்னொரு அம்மா சின்ன குழந்தையோட அவங்க பக்கத்துல இடம் போட்டாங்க. அவங்க உள்ள வரதுக்குள்ள மற்ற இரண்டு பேரு வந்து உக்காந்துட்டாங்க. அந்த சின்ன குழந்தை வசிர்க்க அம்மா இவங்கள்ட சண்டை போட, அந்த ரெண்டு அம்மாவும் அந்த ஜன்னல் ஓர அம்மா கிட்ட சண்டை போட. மாத்தி மாத்தி சண்டை. ரெசெர...