அந்த ஒரு ரயில் பயணம்

நல்ல மாலை பொழுது. வழக்கம் போல நான் நொந்து நூடில்ஸ் ஆகி போய் இருந்தேன். அலைச்சல் உலசச்சல் குடைச்சல் எல்லாம் என்னை கடுப்பேத்தி அமைதியா ஓரமா ஒரு இடம் கிடைச்சா போதும்னு இருந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சி சில பல இடம் காலி ஆக ஒரு சீட்டோட ஓரத்துல நான் உட்கார அந்த சீட்டோட ஜன்னல் ஓரமா ஒரு 45 வயசு மதிக்க தக்க ஒரு அம்மா உக்காந்திருந்தாங்க. எல்லாம் இறங்க அவங்க மடியில தூங்கீகிட்டு இருந்த பையன மெதுவா இழுத்து கால் நீட்டி படுக்க வச்சிட்டு அவங்க தள்ளி தள்ளி உக்கார வந்தாங்க. சரி சண்டை வர போகுது வெலகு வெலகுனு அடுத்த சீட்ல போய் உக்காந்துட்டேன். சமீப காலமா யாராச்சும் அநியாயமா எதாச்சும் செஞ்சா செம கோவம் வந்து எதாச்சும் சொல்லீடறேன். அப்டிலாம் இல்லாம பொறுத்து அமைதியா இருக்கணும்னு எனக்கு நானே சொல்லிகிட்டத சரியா பாலொவ் பண்ணலாம்னு இருந்தேன். இன்னொரு அம்மா சின்ன குழந்தையோட அவங்க பக்கத்துல இடம் போட்டாங்க. அவங்க உள்ள வரதுக்குள்ள மற்ற இரண்டு பேரு வந்து உக்காந்துட்டாங்க. அந்த சின்ன குழந்தை வசிர்க்க அம்மா இவங்கள்ட சண்டை போட, அந்த ரெண்டு அம்மாவும் அந்த ஜன்னல் ஓர அம்மா கிட்ட சண்டை போட. மாத்தி மாத்தி சண்டை. ரெசெர்வ் செய்யாத கம்பார்ட்மென்ட்ல இப்படி உக்கார முடியாது மா, எல்லாரும் வேலை செஞ்சுட்டு அசதியா தான் வரோம். பெர்த் வேணும்னா நீங்க ரிசெர்வ் செஞ்சிருக்கணும், மூணு சீட் கூட எடுத்துகோங்க முழு சீட்டும் கேட்டா எப்படின்னு சொல்ல, அந்த ஜன்னல் ஓர அம்மா இவங்கள கோவமா திட்ட ஆரம்பிச்சிடாங்க. பையன் படுத்திர்க்கான் இரக்கமே இல்ல இவங்க பிள்ளையே பெத்திர்க்க மாட்டாங்க போலனு. இத சொன்னதும் எனக்கு கோவம் வந்துருச்சு. அவங்கள பாத்தேன். அவங்க அமைதியா இருந்தாங்க. ஒரு வேளை அவங்களுக்கு குழந்தை இல்லைனா எவ்வளவு காய படுதீர்க்கும் இந்த வார்த்தை. அப்பறம் எல்லாரும் உக்காந்து செட்டில் ஆனதும், நான் இந்த அம்மாவ பாத்தேன் எனக்கு அவங்கள புடிக்கல. கொஞ்ச நேரம் கழிச்சி எல்லாரும் பேசிகிட்டு வந்துட்டு இருந்தபோ இவங்கள்ட யாரோ உங்க பையனானு கேக்க, அவங்க இல்ல என் தம்பி பையன்னு அமைதியா சொன்னாங்க. நான் அவங்க முகத்த பாத்தேன். கொஞ்ச நேரம் கழிச்சி எனக்கு ஒரு பையன் தான், அவனுக்கு 25 வயசு தான்  கல்யாணம் பண்ணி வச்சேன். மூணே நாள் தான் இறந்துட்டான்னு சொன்னாங்க. ஏன் என்னாச்சுனு மற்றோருதங்க கேக்க இவங்க தூக்கு போட்டுகிட்டான் ஏன்னு தெரியலனு சொன்னாங்க கண்ணெல்லாம் கண்ணீர். அப்பறம் அவங்க பேசவே இல்ல. அழுதுகிட்டே வந்தாங்க.

வாழ்க்கையில ரொம்ப கோவ படுறவங்க வாழ்கையில பெரும்பாலும் கஷ்டத்த மனசுல சும்மந்துட்டு இருக்குறவங்களா தான் இருக்கு.

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்