உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
உன் நெஞ்சிலே உண்டான
விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக்கு ஒப்புவி
விண்மண்ணை ஆண்டிருக்கும்
மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும்
வழி உண்டாக்குவார்.
ஜெயமடைந்து வாழ
கர்த்தாவைப் பிள்ளைபோல்
நீ நம்பி மனதார
பணிந்து பற்றிக்கொள்
உன் கவலைகளாலே
பயம் ரட்டிக்குது
வேண்டாம், ஜெபத்தினாலே
நீ வேண்டிக்கொண்டிரு.
ஏழை அடியாருக்கு
பிதாவாம் தேவரீர்
இன்னின்னது எங்களுக்கு
வேண்டும் என்றறிவீர்
நீர் எதை நல்லதாக
கண்டீரோ, அதை நீர்
உம் வேளை பலமாக
வர விடுகிறீர்.
பல வழி வகையும்
உம்மாலே ஏற்படும்
நீர் செய்வது இசையும்
நீர் சொன்னது வரும்
நீர் வாக்குத்தத்தமாக
மொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக
நற்காலத்தில் உண்டாம்.
இக்கட்டுகளினாலே
கலங்கினோனே, நீ
திடன்கொள், கர்த்தராலே
இக்கட்டின் ராத்திரி
சந்தோஷமாக மாறும்,
சற்றே பொறுத்திரு;
நீ பூரிப்பாய் கொண்டாடும்
நாள் வரப்போகுது.
உன் கவலைகளுக்கு
இன்றே விடைகொடு;
இனி விசாரத்துக்கு
இடம் கொடாதிரு;
நீ ஆளும் தெய்வமில்ல,
நீ பூச்சி என்றறி
சருவத்திற்கும் வல்ல
கர்த்தர் அதிபதி.
நீ பக்தியை விடாமல்
பொறுத்திருக்கையில்
கர்த்தர், நீ நினையாமல்
இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற
வெளிச்சம் காண்பிப்பார்;
நீ நன்மைகாகப் பட்ட
சலிப்பை நீக்குவார்.
அட்சணமே பலத்த
ஜெயமும் பூரிப்பும்
ஆசீர்வதிக்கப்பட்ட
தெய்வீக தேற்றலும்
அடைந்து, இன்பமான
மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான
கர்த்தாவை பாடுவாய்.
கர்த்தாவே, எங்களுக்கு
எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு
நேறிட்டுக்கொண்டிரும்;
ஆ, எங்களைத் தேற்றிடும்
பரகதிக்குப் போம்
வழியிலும் நடத்தும்
அப்போ பிழைக்கிறோம்
Comments
Post a Comment