Who invented this துப்பட்டா?
இன்னைக்கு காலைல சர்ச் போய்ட்டு வண்டில வந்தேன். போகும்போதே காத்துல கன்னா பின்னானு பறந்து டார்ச்சர் பண்ணீடுச்சு என் துப்பட்டா. சரினு வரும்போது பாத்தா முக்கியமா பாத்து ஓட்ட வேண்டிய நேரத்துல என் மூஞ்சி மேலையே வந்து விழுது. அது கண்ணாம்பூச்சி விளையாண்டதுல நான் மண்டைய போற்றுப்பேன். அது ஏன் பொண்ணுங்களுக்கு மட்டும் இப்டி உடைய கண்டுபிடிச்சிர்காங்க? முன்னாடி பொண்ணுங்க புடவை கட்டிக்கிட்டாங்க. அத கட்டிகிட்டு வீட்டுல வேளை பாக்குறதே கஷ்டம், இதுல எதாவது மேல இருந்து எடுக்கனும்னா சுத்தி யாரவது இருக்காங்கலானு யொசிச்சு அப்பறம் செய்ய வேண்டி இருக்கு. சரினு சுடிதாருக்கு மாறுனாங்க, அதுல துப்பட்டானு ஒன்னு, அது எதுக்கு இருக்குனு எனக்கு இன்னும் தெரியல. அழகா துப்பாட்டா போட்டு அத அழுத்தமா பின் செஞ்சி யாருக்கும் இடர் உண்டாக்காம இருக்கனும்னு போட்ற ஆளு தான் நான். ஆனா என்ன தான் துப்பட்டாவ நீங்க டீசெண்ட்டா போட்டாலும் காத்து அடிச்சா அது பறக்க தான் செய்யும். கைய தூக்கும்போதும், எதாவது வேளை செய்ய கைய முன்ன நீட்டும்போதும் துப்பாட்டா உதவாது. அப்பறம் அத எதுக்கு போடனும்? ஆதுக்கு பதிலா ஜீன்ஸ் போட்டு லூசா குர்தி போட்டுகலா...