இன்னைக்கி காலைல..
கடைக்கு போனேன். அந்த கடைல காய்கறி போடுற அம்மா எப்பவும் கொஞ்சம் கோவமா இருப்பாங்க. என்னென்ன காய்கறி இருக்குனு பாத்து எடுத்துட்டு எடை போட கொடுத்தேன். வேறெதாவது வேணுமான்னு கேட்டாங்க, 50 பைசாக்கு புதினா கொடுங்கன்னு கேட்டேன். அவங்க 50 பைசாக்கு இப்பலாம் எதுமே கிடையாது பாப்பானு சொல்ல, சரி 51 பைசாக்கு கொடுங்கன்னு கேட்டதும், சிரிச்சிட்டாங்க. அடுத்தவங்கள சிரிக்க வச்சி பாக்குறதுல என்னமோ இருக்கு..
Nice
ReplyDelete