பஞ்சவர்ணத்தின் பட்டுப்புடவை
என்னைய கேட்டா பஞ்சவர்ணம்தான்
எங்க ஊர்லயே அழகான பொண்ணு
அவ உதடு ரோஜாவர்ணம்
தோளு மஞ்சவர்ணம்
முடி கருப்புவர்ணம்
பல்லு வெள்ளவர்ணம்
காதுமடல் சிவப்புவர்ணம்
பாத்துப்பாத்துதான் பஞ்சவர்ணத்துக்கு
பேரு வச்சாங்களோன்னு நினைப்பேன்
ஒத்தக்கையில் குச்சிமிட்டாய வச்சிக்கிட்டு
இன்னொரு கையில பஞ்சவர்ணத்தோட
கையப்புடிச்சிக்கிட்டு நடக்குறதுன்னா
அடியாத்தி... ஒரேசந்தோசந்தா
ஒருநாள் பஞ்சவர்ணத்துக்கு
கல்யாணம்னு சொன்னாங்க
அன்னைக்கு பாக்கணுமே பஞ்சவர்ணத்த
என்னா அழகு பட்டுப்புடவையில...
நாந்தான் தோழிப்பொண்ணு மாதிரி
அவகூடவே இருந்தேன்
அடுத்தமுற ஊருக்கு போனப்ப
பஞ்சவர்ணம் வெள்ளப்புடவ கட்டிகிட்டு
மூளியா இருந்துச்சு நல்லால்ல
ஏன்னு கேட்டேன்
"அவுக பண்ணாடி சாமிகிட்ட
பொயிடாக"ன்னு அழுதுச்சு
அவுக பண்ணாடி சாமிகிட்ட
பட்டுப்புடவ எடுத்துகிட்டா போகணும்
எனக்குந்தா அழுகாச்சி வந்துச்சு
அந்த சாமிய நீங்க பாத்தா
பஞ்சவர்ணத்தோட பட்டுபுடவய
வாங்கித்தாங்களேன்
அவள் விகடனில் நான் ரசித்த கவிதை. ரொம்ப அழகான வெளிப்பாடு, கணவன் இறந்தா மனைவி ஏன் வெள்ளப் புடவை தான் கட்டிக்கனும்னு ஒரு கேள்விய வித்யாசமா கேற்றுக்காங்க... இந்த சமுதாயதுல கணவனை இழந்தவங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கும்னு நமக்கே தெரியும். அதுல பெண்களும் சேந்து தொல்லை கொடுக்குறாங்க, கணவனை இழந்துட்டா ஆனா பாரு கலர் புடவை என்ன பொட்டு என்ன பூ என்ன அப்படீனு ஒரு கூட்டமே அலையும். கல்யாணத்துக்கு முன்னாடியும் அந்த பொண்ணு அதெல்லாம் வசிருந்தவ தானே. பரவால இப்பலாம் சமுதாயம் மாறீருக்கு, ஆனா அந்த சுதந்திரம் கூட சும்மா வந்துடல, நம்ம பாட்டி கொல்லு பாட்டி எல்லாம் ரொம்ப கஷ்டப்படிருக்காங்க, பல அவமானத்த சுமந்து, கஷ்ட்டபட்டு தான் இன்னைக்கு நாம ஓரளவுக்காவது சுதந்திரமா அநியாயமான நம்பிக்கைக்குள்ள வேகாம இருக்கிறோம்.
Comments
Post a Comment