மொழி
சாரீங்க இது அந்த நல்ல படத்த பத்தி இல்ல. மொழி பத்தி பேசனும்னா, ஆதிலேர்ந்து வரணும். எனக்கு வெவரம் தெரியாத வயசுல ஹிஸ்ற்றி படிக்கும்போது இந்தியால பல மொழிகள் இருக்கு இருந்தாலும் நாமெல்லாம் ஒன்னா ஒத்துமையா இருக்கோம்னு படிசிருக்கேன். ஆனா இப்ப அதெல்லாம் தப்பா ப்ரிண்ட் பண்ணீட்டாங்களோனு யோசைனையா இருக்கு. இந்தியால பல மொழிகள் இருக்கு, எல்லா ஊருக்கும் தாய் மொழினு ஒன்னு இருக்கு. நமக்கு தமிழ் சொல்லவே வேண்டாம். பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புஞ்சாப் அங்கெல்லாம் போனா, அவங்க மொழி மட்டுமே பேசுறவங்கள நாம அதிகமா பாக்கலாம். ஆனா தமிழ் நாட்டுல மட்டும் தான் தமிழ் பேசுறவங்கள கம்மியா பாக்க முடியும். ஆங்கிலம் நமக்கிடைல யுனிவெர்சலி அக்செப்படெட் லாங்குவேஜா இருக்கு. நல்லா பரவுன ஒரே மொழி ஆங்கிலம் தான். இந்தியால எங்க போனாலும் அவங்க சொந்த மொழில பேசுறதையே பெருமையா நினைகிறாங்க. ஆங்கிலம்ங்கிற இன்னொரு வேற்று மொழி தெரியலைனு வருத்தப் படுறதில்லை. ஆனா தமிழ் நாட்டுல மட்டும் தான் ஆங்கிலம் தெரியாதவங்க கூனி குருகிப் போகுற அளவுக்கு நாம நாசமாக்கி வச்சிருக்கோம். ஆங்கிலம்ங்கிறது இன்னொரு மொழி தான், அதும் வேற்று மொழி. தாய் மொழி தெரியாதவங்க தான் வெக்கப்படனும்.
என்ன பொருத்தவரைக்கும், சொந்த ஊர்ல தாய் மொழி பேசுறதுல உள்ள சுகம் வேறு எதுலையுமே கிடைக்காது. அதுக்காக தமிழ் தெரியாதவங்கள்ட தமிழ்ல பேசுற மதம் ரொம்ப தப்பு, நல்ல வேளை அது நம்ம ஊர்ல இல்ல. ஆங்கிலம் தெரிஞ்சவங்கள்ட ஓ எங்களும் தெரியும்னு சீன் போட்டு பேசாம, டீசெண்ட்டா பேசலாம். ஆங்கிலம் தெரிஞ்சி வச்சிகிறதுல தப்பில்ல, ஏன்னா மனுஷன் பேசிக்கிறதுக்காக உண்டாக்க பட்டடுதான் மொழி, அதுல என்ன அடம் நான் இது தான் பேசுவேன்னு, இது தான் ஸ்டைல்னு? தமிழ் தெரிஞ்சவங்ககிட்ட தமிழ்ல பேசுங்க, ஆங்கிலம் மட்டுமே தெரிஞ்சவங்ககிட்ட ஆங்கிலம் பேசுங்க, வேறு மொழி மட்டுமே தெரிஞ்சவங்ககிட்ட வேறு மொழி கத்துகிட்டு பேசுங்க, இல்ல அவங்களுக்கு ஆங்கிலம் தெரியும்னா ஆங்கிலம் பேசுங்க, அத விட்டுட்டு நம்ம ஊர்ல நம்ம மக்கள்ட்ட நம்ம மொழிய பேசாம இருக்குறதுக்கும், வேறு மொழிய மதிச்சி நம்ம மொழிய கேவளப்படுதுறதுக்கும் யார் நமக்கு உரிமைய கொடுத்தது?
Comments
Post a Comment