காலமே என்னை காப்பாற்று
நான் இதுவரை பாரதியாரின் கவிதைகளில் மட்டுமே புரட்சியை பார்த்திருக்கிறேன், பிரிதோரு கவிஞரில் அதை பார்த்தேனென்றால் அது வைரமுத்துவின் கவிதைகள் தான்... அழகு தமிழில் இன்றைய எழுச்சி கவிதைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் அவர் கவிதைகளை படிப்பதில் எனக்கு அலாதி இன்பம்.
அதிகாலைக்கனவு கலைக்கும்
அலாரத்திடமிருந்தும்
நித்தம் நித்தம்
ரத்தத்தில் அச்சேறிவரும்
பத்திரிக்கை செய்திகளின்
பயங்கரத்திலிருந்தும்
தென்னை மரத்தில் அணில்
வேடிக்கை பார்க்கும்
குழந்தை நிமிஷத்தில்
அலரும் தொலைபேசியின்
அபாயத்திலிருந்தும்
சிநிகிக்கும் பெரியவர்களின்
சிகரெட் புகையிலிருந்தும்
நோயுற்ற காலை
தனிமையிலிருந்தும்
நோய்கள் வந்தபின்
மருந்திடமிருந்தும்
மருந்து தீர்ந்தபின்
நோயிடமிருந்தும்
எனது பக்கம் நியாயமிருந்தும்
சாட்சிகள் இல்லா சந்தர்ப்பத்திலிருந்தும்
வருமானம் எல்லாம்
தீரும் வயதில்
வரிபாக்கி கேட்கும்
ஆணையிலிருந்தும்
இல்லையென்றொருவன்
தவிக்கும் பொழுதில்
இல்லையென்று நான்
தவிர்ப்பதிலிருந்தும்
தீதும் நன்றும்
பிறர் தர வாரா
என்பது
எனக்கு ஏற்புடைத்தென்பதால்
என்னிடமிருந்தே
என்னிடமிருந்தே
காலமே என்னை காப்பாற்று

Comments
Post a Comment