வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு
வைரமுத்துவின் கவிதைகள் பிடிக்க காரணம் அவை அனைத்தும் உணர்வுல்லவை உணர்வுகளை தூண்டுபவை, புது யுகத்தில் புத்திசாலிதனத்தில் புதைந்து மழுங்கி போன நம் பாரம்பரிய அழகை கொண்டவை, விலை மதிப்பில்லா விஷயங்களை நியாபகப்படுத்துபவை, இதயத்திற்கு இதமானவை, அப்படி இருப்பவைகளில் ஒன்று இங்கே..!! அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட் கதவு தட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சிப் பாடும் உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் இது போதும் எனக்கு தண்ணீர் போலொரு வெந்நீர் சுகந்தம் பரப்பும் துவாலை குளிப்பறைக்குள் குற்றாலம் நான் குளிக்க நனையும் நீ இது போதும் எனக்கு வெளியே மழை வேடிக்கை பார்க்க ஜன்னல் ஒற்றை நாற்காலி அதில் நீயும் நானும் இது போதும் எனக்கு குளத்தங்கரை குளிக்கும் பறவைகள் சிறகு உலர்த்தத் தெறிக்கும் துளிகள் முகம் துடைக்க உன் முந்தானை இது போதும் எனக்கு நிலா ஒழுகும் இரவு திசை தொலைத்த காடு ஒற்றையடிப் பாதை உன்னோடு போடி நடை இது போதும் எனக்கு மரங்கள் நடுங்கும் மார்கழி ...
Nice one :-)
ReplyDeleteThank you Dear...
ReplyDelete