இன்னைக்கு ஒரு அனுபவம்
என் டாடிக்கு என்னோட ஷாபிங் போக ரொம்ப பிடிக்கும். நாங்க இன்னைக்கி இரண்டு பாய் வாங்கலாம்னு பாய் விக்கிற இடத்துக்கு போனோம். அங்க நாலு பேர் உக்காந்திருந்தாங்க பாயோட, அதுல நடுத்தர வயதுக்கு மேல இருந்த ஒரு அம்மா எங்கள வாங்கனு கூப்டாங்க. சரீன்னு போனோம்.
எனக்கு ஒரு பழக்கம் எனக்கு தெரியாத பொருள் எது வாங்குனாலும் ஏன் இப்டி இருக்கு எது நல்லது என்ன வித்தியாசம்னு கேள்வியா கேப்பேன். வம்புக்காக இல்ல எனக்கு தெரியாத விஷ்யங்கள கேட்டு நல்லா தெரிஞ்சிக்க பிடிக்கும். அவங்கள்ட போய் நான் பாய் வேணும்னு கேட்டேன், அங்க டிசைன் போட்ட பாய் அப்பறம் சாதாரண பாய்ல இரண்டு வகை வச்சிருந்தாங்க. எனக்கு டிசைன் வேண்டாம் சாதாரண பாய் கொடுங்கன்னு கேட்டேன் அந்த இரண்டு வகைல ஒன்னு சொல்லி அதை எடுத்துக்கோங்கநனு சொன்னாங்க. நான் இன்னொரு ரகத்தை பார்த்து ஏன் அது வேண்டாம்னு கேட்டேன். அவங்க சொன்னாங்க இது நூலுல கட்டுனது அது நிரம்புல கட்டுனதுனு சொன்னாங்க. டாடி இரண்டுக்கும் விலை கேட்டாங்க நூலுல கட்டுனதோட விலை, நிரம்புல கட்டுனதோட, விலை ஜாஸ்தியா இருந்துச்சு. டாடி கேட்டாங்க ஏன் அப்டி நிரம்புல கட்டுனது தான நல்லா உழைக்கும் ஏன் விலை அதவிட குறைச்சலா இருக்குனு கேட்டாங்க. அவங்க சொன்னாங்க இந்த பாய் சூடு அந்த பாய் குளிர்ச்சின்னு. குளிர்ச்சிக்காக தான் பாய் வாங்க போனோம் ஒரு வேளை குளிர்ச்சி இல்லாமலும் கோரை பாய் மாதிரி ஒரு பாய் இருக்கும் போலனு அதெப்படி கோரை பாய் தானனு கேட்டேன். அவங்க சிரிச்சாங்க, நான் உடனே பொய் சொல்றீங்கனு விளையாட்டு தோரணைல சொன்னேன், அவங்க நல்லா சிரிச்சிடாங்க, அப்பறம் சிரிச்சிட்டே பொம்பள புள்ளைய வச்சிக்கிட்டு பொய் சொல்ல கூடாதுனு என் தோளை தட்டீட்டு அது முத்துன கோரைனு சொன்னாங்க.
நடந்தது என்னனா அவங்க வச்சிருந்த பாய்ல ஒரு ரகம் இளம் கோரை இன்னொன்னு முத்துன கோரை. இளம் கோரை நூலுலையே பின்னிடலாம், முத்துன கோரை மடங்குனா உடைஞ்சிடும் அதுனால நரம்புல கட்டீர்காங்க. இளம் கோரை தான் நல்லது விலையும் ஜாஸ்தி, முத்துன கோரை உழைக்காது அதுனால இது அதை விட விலை கம்மி. விலை ஜாஸ்தி உள்ளது தான் நல்ல பாய் அதை வாங்குனாதான் அவங்களுக்கும் நல்லது, ஆனா வித்தியாசத்துக்கு இன்னொன்னு முத்துன கோரைனு சொன்னா எங்க இதும் அப்படி இருக்குமோனு நாங்க வாங்காம போயிடுவோம்னு வேற வித்தியாசம் சொல்ல முயற்சி செஞ்சிர்காங்க.
நாங்களும் சிரிச்சிட்டு இளம் கோரைல இரண்டு பாய் வாங்கீட்டு வந்தோம். வர்ற வழில டாடி "மறைக்க தெரியல அவங்க ரொம்ப நல்லவங்க போல"னு சொல்லீட்டு வந்தாங்க.

Comments
Post a Comment