Save Water..!!
சமீபத்துல நான் கேட்ட ஒரு நல்ல விஷயம் பகிர்ந்துக்க தோணுச்சு, இது
ஒரு கல்லூரியில உருவாக்கப்பட்ட ஒரு குறும்படம்.
ஒரு பரப்பரப்பான மாநகரத்துல விடுமுறை நாள்ல ஒரு பையன் காலைல கொஞ்சம் லேட்டா
எழுந்து டீ.வி. ஆன் பண்ணீட்டு ப்ரஷ் எடுக்குறான் பல்லு விலக்க. பைப்ப திறந்து பல்லு
விலக்கீட்டு இருக்கும்போது டீ.வி.ல அவனுக்கு பிடிச்ச பாட்டு வருது, அந்த பாட்டுல மெய்
மறந்து கேட்டுக்கிட்டே பல்லு விலக்குறான் பைப்ப திறந்துவிட்டத மறந்து. அந்த பாட்டு
முடிஞ்சு அடுத்து ஒரு குறும்காட்சி டீ.வி.ல வருது, இவன் பாடல் நின்னதும் அது என்னனு
பாக்குறான், அதுல ஒரு இடத்துல பைப் இருக்கு அதுல சொட்டு சொட்டா தண்ணீர் கொட்டுது, அதுக்கு
கீழ ஒரு குடம் அத சுத்தி நிறைய குடம் குடமா இருக்கு, அந்த ஊரு பெண்கள்லாம் அங்க காத்து
நிக்கிறாங்க இது எப்ப நிரம்பும் நம்ம குடம் எப்ப வரும் தண்ணீர் பிடிச்சிட்டு போகலாம்னு.
இந்த பையன் அத பாத்ததும் உடனே தான் திறந்து விட்ட பைப்ப மூடுறான், உடனே அந்த பைப்புல
சொட்டு சொட்டா வந்த தண்ணீர் வேகமா வருது.
எவ்வளவு அழகான சுய உணர்தல் பற்றி ஒரு குறும்படம். இப்படி ஒவ்வொருத்தரும் சுயமா
உணர்ந்து பிறர் பற்றிய கருத்தோட இருந்தா இன்னும் பல பேர் பலனடைவாங்க. ஏன்னா நம்ம வீணாக்குற
ஒவ்வொரு விஷயமும் யாருக்கோ கிடைக்க வேண்டிய அத்தியாவசிய தேவை..
Comments
Post a Comment