உயிர் Vs மண்
ஈழத் தமிழர்கள் போராட்டம்கிறாங்க,
ஸ்ரீலங்கா கில்லிங் பீல்ட்ங்கிறாங்க, எனக்கும் இந்த அரசியலுக்கும் ரொம்ப தூரம் சத்தியமா
ஒன்னுமே புரியல. இவங்க மனுஷங்கள கொடும படுத்துராங்கனு மட்டும் புரியுது. ஏன் கொடும
பண்றாங்கன்னு கேட்டா இலங்கைல போய் தமிழ் நாடு
கொடுனு கேட்டாங்களாம். ஏன் கேட்டாங்கனு கேட்டா அது ஆரம்பத்துல தமிழ் நாடா இருந்துசுங்கிறாங்க. நேத்து கதைலாம்
யாரு நம்புவா, யாரோ இன்னைக்கி வந்து நேத்து தமிழ் நாடு இங்கிலீஷ் நாடா இருந்துச்சு
நீங்க எங்களுக்கு நாடு கொடுங்கனா கொடுபோமா?
நம்ம நாடு வேற நாடுன்னு உலகத்துல
ஏதும் கிடையாது. உலகத்துல ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு வகை விளைச்சல் செழுமை இருக்கும்.
மனுஷங்க எல்லாரும் அத பகிர்ந்துக்க ஒவ்வொரு இடத்துக்கும் பெயர் இட்டாங்க கண்டுபிடிகிறதுக்காக.
அங்க இது அதிகமா விளையும் இங்க அது அதிகமா
விளையும், அங்க இருந்து கொஞ்சம் இங்க இறக்கலாம் இங்க இருந்து கொஞ்சம் அங்க ஏற்றலாம்.
அப்போ எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும்ங்கற சமத்துவத்துக்காக பெயர் இட்டாங்க. இப்போ
அந்த பேர வச்சிக்கிட்டு என் நாடு தேச பற்றுன்னு மனுஷன மனுஷன் போட்டு கொல்றது நம்ம முட்டாள்
தனம் இல்லையா?
எல்லாரும் நான் இந்தியன் தமிழன்
அவன் இவனு சொல்றத விட்டுட்டு நான் மனுஷனு சொல்ல பழகுங்க, இங்க வாழ வழி இருக்கா வாழுங்க,
வழி இல்லையா எங்க இருக்கோ அங்க முறையா போங்க. போற இடத்துல உருபடியா இருங்க அங்க போய்
சொந்தம் கொண்டாடாதீங்க, எங்க இருந்து வந்தீங்களோ அவங்கள பத்தி அங்க உள்ள மனுஷங்க உயர்வா
நினைக்கிற மாதிரி நடந்துகோங்க. எல்லாம் தப்பு தப்பா பண்ணீட்டு கொல்றாங்க அடிகிராங்கனு
சொல்றீங்க. இல்ல அங்க தப்பு நடக்குதா, வாழ முடியலையா எல்லாரும் இங்க வாங்க, நீங்கலாம்
தமிழர்கள் தான, இது தமிழ் நாடு தான, இங்க வந்து சுதந்திரமா இருங்க, ஏன் எங்கையோ மாட்டி
அவன் நாட்ட பங்கு கேட்டு செத்தாலும் சாவேன தவிர விட்டுகொடுக்கமாட்டேன்னு நிக்கிறீங்க?
செத்தவங்களுக்கு உண்மையிலையே தெரியுமா அது முன்னாடி தமிழ் நாடா இருந்துச்சுனு? நாளைக்கு
தமிழ் நாடு தமிழ் நாடாவே இருக்குமா? நேத்து இத ஆங்கிலேயர்கள் தான ஆட்சி செஞ்சாங்க?
நாளைக்கி இது என்ன ஆகும்னு உங்களுக்கு தெரியுமா? இல்ல நீங்க தான் உசுரோட இருபீங்கனு
தெரியுமா? ஏன் இல்லாத உரிமைக்காகவும், தெரியாத உண்மைக்காகவும், உசுரும் மானமும் போனாலும்
பரவாலன்னு நிக்கிறீங்க? சாவொட ரணம் எத்தன
பேருக்கு தெரியும்? இழப்போட வலி எத்தன பேருக்கு புரியும்? எதோ உரிமை சொத்து நாட்டு
போராட்டம் நடக்குதுனு சாகவிட்டு வேடிக்கை பாக்குறீங்களா? இறந்தவங்கள நேசிச்சவங்க இப்போ
எப்படி இருப்பாங்கனு யோசிச்சு பாத்தீங்களா? உசுரையும் மானத்தையும் கொடுத்து நாட்ட மீட்டு
என்ன பண்ணப்போறீங்க? இருக்குற
வரைக்கும் மனுஷனா நிம்மதியா சந்தோஷமா இருந்துட்டு போலாமே..
ஒரு தாய்கிட்ட உங்க குழந்தையோட
பிணம் வேணுமா இல்ல உயிரோட எங்கள்ட்ட இருகட்டுமானு கேட்டா என்ன சொல்வாங்க, வேண்டாம்
உயிரோட உங்கள்டையே இருக்கட்டும்னு தான, நீங்க மட்டும் ஏன் நம்ம தமிழர்கள் செத்தாலும்
பரவல கொடும அனுபவிச்சாலும் பரவால, இலங்கைல இப்டி பண்றாங்க அப்டி பண்றாங்கன்னு படம்
போட்டு காட்றீங்களே தவிர, என்னாத்துக்கு நாடு நம்ம தமிழர்கள் நல்லா இருக்கட்டும்னு
ஏன் நினைக்கமாட்டேங்குறீங்க?
Comments
Post a Comment