"இவைகள்.." சிலர் ஆசை படுவதற்கு மட்டுமே

நேத்து ராத்திரி ஒரு சம்பவம்,  கடலைகாரர் வந்தார்னு கடலை வாங்க போனேன் . அது பொதுவா 15 ரூபாக்கு வாங்குறனால அம்மா 15 ரூபா சில்லறையா எடுத்து வச்சிருந்தாங்க. நான் போனேன், போனப்போ யாரும் வரல நான் போய் சொல்லி அவர் பொட்டணம் போடும்போது இரண்டு சின்ன பிள்ளைகளோட அவங்க பாட்டிமாவும் வந்தாங்க அந்த பிள்ளைங்கள ஓடாதனு அதட்டுனபடியே. பாத்ததும் கொஞ்சம் ஏள்மையானவங்கனு தெரிஞ்சுது.

மொதல்ல ஓடி வந்த பிள்ளைக்கு 4 வயசு இருக்கும் வந்து அவங்க பாட்டிமாட்ட எனக்கு இது வேணும்னு திட்டுவாங்கலோங்கிற  கூச்சத்தோட எனக்கு இது வே... இது..னு ஒரு பாக்கெட் மேல கைய வச்சி காட்டுனா. அது நீள நீளமா வெட்டுன உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட். அவங்க பாட்டிமா அது எதுக்கு உனக்குன்னு சொன்னாங்க. அப்பறம் அந்த பொண்ணு ரெண்டு கையோட விரலையும் வாய்ல வச்சி கடிச்சிட்டே அந்த பாக்கெட்ட ஆசையா பாத்தா.

நான் அந்த  பாக்கெட்ட எடுத்து நான் இதும் எடுத்துக்குறேன் கணக்குல சேத்துகோங்கனு கடலைக்காரர்கிட்ட சொல்லீட்டு அந்த பொண்ணுட்ட கொடுத்தேன். அந்த பொண்ணு வாங்கவே இல்ல. பரவால வாங்கிக்கோன்னு சொல்லி ஒரு வழியா கொடுத்துட்டேன். அவ முகத்துல சந்தோஷத்துக்கு பதிலா சங்கடம் தான் நிறைய தெரிஞ்சுது. வாங்கீட்டு அவங்க பாட்டிமாவ பாத்தா. நான் நடக்குறத பாக்குறதுக்குள்ள கடலைகாரர் அது 5 ரூபானு சொன்னார். நான் கொண்டுவந்தது நான் வாங்குனதுக்கு செரியா போச்சு நான் 5 ரூபா தரனும், இருங்கன்னு வீட்டுக்கு போய் எடுத்துட்டு வந்து கொடுத்துட்டு போறேன், அந்த பொண்ணுட்ட அந்த பாட்டிமா மெதுவா செய்கை காட்ட, கூட இருந்த அந்த பொண்ணோட அக்கா ஏய் போ போனு சொல்ல அந்த பொண்ணு அக்கா அக்கானு கூப்ட்டா. என்னனு திரும்பி பாத்தா இந்தாங்கனு பாக்கெட்ட திருப்பி தர்றா. நான் சிரிச்சிட்டே அது உனக்குதான்னு சொல்லீட்டு வந்துட்டேன். 

நம்ம வாழற உலகத்துல அடுத்தவன் பணம் காசு அடிகிறதுக்கு புது புது வழிலாம் கண்டுபிடிக்கிறாங்க, இந்த காலத்துலயும் கையுல எதுமே இல்லாம, ஆசை இருந்தாலும் அடுத்தவங்கள்ட கைநீட்டாம அடுத்தவங்க காசுக்கு ஆசை படாம வாழறாங்க, யார் யாரையோ தேச தலைவர்களா உக்கார வச்சிருக்காங்க, யார் யாருக்கோ விருது தர்றாங்க இவங்கள  கொஞ்சம் எல்லாரும் திரும்பி பாருங்க. இவங்ககிட்ட இருக்குற மனமும் மானமும் யார்ட்டையும் இருக்குறதில்ல.

இதுல என்ன கொடுமைனா அந்த பொண்ணு ஆசை பட்டு கேட்ட சிப்ஸ் பாக்கெட் 5 ரூபா. இவங்க என்னிக்கி நம்ம வழக்கமா சாப்பிடுற நெல்லு சோறு, குழம்பு, காய், கேக், பீசா, பர்கர்லாம் ருசி பாக்குறது? தேசம் எங்கையோ போகுதுன்னு நமக்கு தெரிஞ்சதுதான், அவங்கள திட்டி பிரயோஜனம் இல்ல, முடிஞ்ச வரைக்கும் நம்ம கண்ணுக்கு தெரிஞ்ச இந்த மாதிரி இருக்குறவங்களுக்கு நம்ம வாழ்ற வாழ்க்கைல நம்ம அனுபவிக்கிற நல்ல விஷ்யங்கள அவங்ககிட்ட பகிர்ந்துக்கலாம். அது வெறும் கேக்கா இருந்தாகூட  பரவால, அத வாழ்க்கைல சாப்பிட ஏங்குற குழந்தைங்க இன்னும் இருக்க தான் செய்றாங்க.


Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்