மிட்னைட் கிறுக்கல்ஸ்
கசக்கி பிழிந்து பார்க்கிறேன்
வற்றியபாடில்லை
என் கண்ணீர்
உனக்காக ஒவ்வொன்றாய்
இழந்தபோதெல்லாம் வலிக்கவில்லை
என்னை இழக்க
நீ தயாரானதே வலித்தது
என் வாழ்கையை தேடு என்று
என் இதயத்திடம் ஆணையிட்டேன்
அது சட்டென
உன் திசை பார்த்து திரும்பி நிற்கிறது
உன்னுடன் இருந்த நாட்கள் எனக்கு கற்றுத்தந்தது
ஒரு முறை இருந்தது
தொடராது
திரும்பவும் நிகழாது
Comments
Post a Comment