Watching Out
வெளிய போகும்போது consciousஆ இருக்குறதை விட attentive ஆ இருக்கிறது அவசியம்னு புரிஞ்சிகிட்டேன்.
ரெண்டு நாளைக்கு முன்னாடி கடைக்கு போயிருந்தப்போ காய்கறி எடுத்துட்டு இருந்தேன் வெங்காயம் சரி இல்லாம இருந்ததால அங்க அம்மாகிட்ட மூட்டையில வேற வச்சிர்காங்கலானு கேட்டேன். அவங்க எங்கையோ பாத்துகிட்டே ம்ம்ம்னு தலைய ஆட்டுனாங்க. நான் போடுவாங்கனு பாத்தேன் போடல, கொஞ்ச நேரத்துல மெதுவா திருப்பி கேட்டேன். அப்பவும் அப்படியே தலைய ஆட்டீட்டு விட்டுட்டாங்க. அவங்கள கவனிச்சேன். எனக்கு முன்னாடி இருந்த ஒருத்தங்க காயலாம் வாங்கீட்டு மிளகாய் போட்டுடுங்க நான் அங்க போய் பழம் எடுத்துட்டு வரேன்னு அங்க போய்ட்டாங்க. இவங்கள கவனிச்சேன், அவங்க சொன்ன எல்லாம் சரியா எடுத்து போட்டுட்டு அமைதியா நின்னாங்க. எடுக்க போனவங்க வந்து எல்லாம் போட்டீங்கலானு கேட்டாங்க. நான் இவங்கள பாத்தேன், இவங்க லேசா தலைய அசச்சிட்டு அமைதியா நின்னுட்டு இருந்தாங்க. மிளகாய் போடீங்கலானு அவங்க கேட்டதுக்கு இவங்கள்ட்ட இருந்து எந்த பதிலும் வரல. அப்ப தான் புரிஞ்சிது எனக்கு ஏன் வெங்காயம் வரலனு. இவங்களுக்கு மனசோ உடம்போ சரி இல்ல போல. அவங்க விடாம மிளகாய் போடீங்கலானு கொஞ்சம் அழுத்தமா கேட்டாங்க. நான், நீங்க கேட்ட எல்லாமே போட்டுட்டாங்கன்னு சொன்னேன். அவங்க ஏதும் சொல்லாம கெளம்பி போயிட்டாங்க. இதையெல்லாம் இவங்க பையன் பக்கத்துல காய் எடுத்து போட்டுட்டு பாத்துட்டே இருந்திர்க்காங்க.
நான் இவங்கள திரும்பி பாத்ததும்.இவங்கள காணோம். அவங்க பையன் தம்பிக்கு போன் பண்ணி அம்மாவை வந்து கூட்டீட்டு போனு சொன்னாங்க. இவங்க அமைதியா பக்கத்துல உள்ள மரத்தடியில நின்னுட்டு இருந்தாங்க. அவங்க பையனுக்கு வேலையே பாக்க முடியல. சுத்தி பாக்குறோம் என்னமோ நினைக்கிறோம் ஆனா ஒவ்வொருத்தர் வாழ்க்கைல கண்ணுக்கு தெரியாத எத்தன எத்தன போராட்டம் கஷ்டம் கவலைகள். அப்போ தான் புரிஞ்சுது பல இடங்கள்ல நம்ம இதை செஞ்சிர்றோம்னு, எதையும் புரிஞ்சிக்காம நமக்கு வேண்டியதோ நம்ம எதிர்பாத்ததோ கிடைக்கலேனா கோவ பட்டிர்றோம்.
Comments
Post a Comment