Posts

Showing posts from August, 2011

தொட்டில் மேல நடுவுல ஒரு பொம்மை சுத்தீட்டே இருக்கும், அது ஏன்னா..

சின்ன குழந்தையோட தொட்டில் மேல நடுவுல ஒரு பொம்மை சுத்தீட்டே இருக்கும், அத கண்டிப்பா ஏதோ சம்பரதாயம் மாதிரி கட்டீடுவாங்க. அது ஏன் கட்டுறாங்கனா, மனுஷனுக்கு படைச்ச ஒவ்வொரு உறுப்பையும் அவன் பயன் படுத்த படுத்த தான் அது இயங்குற மாதிரி, நல்லா உருவாகுற மாதிரி கடவுள் அவன உருவாக்கி இருக்கார். அதும் சின்ன குழந்தைங்க வளர்ற பருவம், அந்த குழந்தைங்க கண்ணு நகராம ஒரே இடத்தை பாத்துட்டே இருந்தா, கண் சரியா வளர்ச்சியும் அடையாது, இயங்கவும் செய்யாது. அதுனால அந்த சுத்துற பொம்மைய கட்டீடுவாங்க. சி ன்ன குழந்தைங்கள தொட்டில்ல போட்டதும் அந்த பொம்மைய பாத்துதான் ஆகனும் ஏன்னா கண்ணு முன்னாடி அது தான் இருக்கும்.. அந்த சுத்துற பொம்மை எப்டி இருக்கும்னா, அந்த குழந்தைக்கு பிடிச்ச கலர் இல்லேனா டெட்டி பியர், இல்லேனா பூ போல வித விதமா இருக்கும்.. அந்த குழந்தை தொட்டில்ல இருக்கும்போது அந்த சுத்துற பொம்மைல தனக்கு பிடிச்ச பொம்மைய அல்லது அது சுத்துறத பாக்கும். அப்டி பாக்கும்போது கண் விரிஞ்சி கரு விழி சுத்தி வரும். அப்டி சுத்துறது தான் கண்களுக்கு எக்செர்சைஸ். அதனால தான் சின்ன குழந்தைங்க தொட்டில்ல அந்த சுத்துற பொம்மைய கண்டிப்பா கட்ட...

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?

இந்தியன் : அடுத்த வருஷம் 20 இந்தியர்களை நிலாவுக்கு அனுப்ப போறோம். அமெரிக்கன்: ஓ சந்தோஷம், யாரெல்லாம் அனுப்புரீங்க? இந்தியன்: 2 ஓசி, 5 பிசி, 5 எம்பிசி, 3 எஸ்சி, 3 எஸ்டி, 2 ஸ்பெஷல் கோட்டா அமெரிக்கன்: ????? சா திகள் இல்லையடி பாப்பானு பாரதி சொல்லிவச்சிட்டு போன பாட்ட பாட புத்தகத்துல போட்டதும் நம்ம ஆளுங்க தான், அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் செய்யும் போது சாதி என்னனு கம்யூனிட்டி சர்ட்டிஃபிக்கேட் கேக்குறதும் நம்ம ஆளுங்க தான், இது தப்புனு தெரிஞ்சு வேண்டாம்னு நினைக்கிற மனசு வேற வழி இல்லாம தன் குழந்தைக்கு சாதி ஃபில் பண்ணிக்கொடுக்குறதும் நம்ம ஆளுங்க தான்.. என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?

உறக்கமில்லா இரவுகளில் இறக்கமில்லா நினைவுகள்

Image
ஒவ்வொரு துறையிலும் சிலர் மிக சிறந்த முறையில் தங்கள் பணிகளை செய்தாலும் பலரின் முகவரி இன்னும் அரியப்படாமலும் அவர் சிந்திய ரத்தத் துளிகள் புதைக்கபட்டும் இருக்கின்றன. பி.கு. யாரையோ விருது கொடுத்து பாராட்டும் பொழுது எனக்கு தோன்றியது..

கேட்டு ரசித்தது

சந்தோஷத்த தொப்பி மாதிரி தலையிலப் போட்டுகனும் கவலைய செருப்பு மாதிரி கால்லப் போட்டுகணும் இத கொஞ்சம் உங்க காதுலயும் போட்டுகணும்!!

உறக்கமில்லா இரவுகளில் இறக்கமில்லா நினைவுகள்

Lets lose ourself in real aspects of life and not in the game of life. In real aspects of life there are two ways to get lost. One is losing ourselves in emotion. Another one is losing  ourselves in affection. As always choices are left up to us.. பி.கு. அது  என்னமோ கொஞ்சம் ராத்திரி ஆக ஆரம்பிச்சா பெணாத்த ஆரம்பிச்சிடுறேன்..

காலையில் ஏன் துளசி மாடத்தை சுற்றி வருகிறார்கள்?

Image
து ளசி, தூய்மையின் அடையாளம் என அனைவருக்கும் தெரியும்.. வீட்டுக்கு வீடு துளசி வைத்திருப்பதும், அதை தூய்மையாக மாடம் வைத்து பாதுக்காப்பதும்,  அதை தினமும் காலையில் சுற்றி வருவதும்  அவசியம் என பெரியோர் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கு ஆரோக்கியமான காரணம் உண்டு.. பெரும்பாலும் பெரியவர்கள் சொன்னவைக்கு அர்த்தமுள்ள காரணம் உண்டு, பின்னர் சிலர் உண்டு செய்த மூட பழக்கத்தினால், பெரியவர்கள் சொன்ன நன்மையையும் நாம் தொலைத்துவிட்டோம்.. து ளசி செடி அதிகாலையில் வெளியேற்றும் காற்றை சுவாசித்தல் மனிதனுக்கு மிகவும் ஆராக்கியம். அதனால் துளசியை மாடம் போல், நம் உயரத்தில் ஒரு மேடை அமைத்து, அதை காலையில் சுற்றி வருவது ஒரு வழக்கமாக உள்ளது. காலையில் அதன் முன் நிற்கலாம், வெருமென நின்றால் போர் அடித்துவிடும் நாளடைவில், அது மட்டும் இன்றி, நிற்பதை விட மனிதன் நடக்கும் போது தான் மூச்சு இரைத்து அதிக காற்றை உள் இழுப்பான், எனவே துளசி வெளியேற்றும் அக்காற்றை சுவாசிக்கும் மனிதன் ஆரோக்கியமாக இருப்பான். தினமும் காலை வெரும் வயிற்றில் நான்கு துளசி இலை சாப்பிட்டால் ரத்ததை சுத்தப்படுத்தும், ஒவ்வாமை, ரத்த மாசு படுதல் ப்ரச்ச...

மாற்றி சுழல்கிறேன்

Image
அன்பு, உறவுகள் என்று உலக ஓட்டத்திற்கு ஒட்டாமல் மாற்றி சுழல்வது  மிக கடினம் என்று கற்றுக்கொண்டேன், ஆனாலும் மாற்றி சுழல முடியவில்லை..

மாறு...பாடு

கடிக்கும் கொசு அனைத்தையும் கொன்றுவிட்டு,  இறந்த கொசுவை வருத்ததுடன் பார்க்கிறேன்..

For My Friends!!

Image
உலகில் அனைத்தும் அன்னியமாய் தோன்ற, நான்  பாதுக்காப்பாய் பிடித்துக்கொள்ளும் கட்டை விரல் நீ.. உலகின் சோகங்கள் என்னை பயமுருத்தும்பொழுது, ஓடி நான் என்னை ஒளித்துக்கொள்ளும் முந்தானை நீ.. கு ழம்பிய குட்டையாய் நானிருக்க, என்னுள் மிக சிறந்த மீனை பிடித்து காட்டியது நீ.. ஆயி ரம் மக்கள் உள்ள கூட்டத்தின் நடுவில் தொலைந்தவளாய் நின்ற என் தோளில், கை  போட்டு வா போகலாம் என்றது நீ.. உச்சியில் இருந்து பின்னோக்கி விழ இருந்த என்னை ப ிடித்து, ஏறு நான் இருக்கிறேன் என்றது நீ.. அமைதியின் மடியில் இசையாய் என் காதில் ஒலிப்பதும் நீ.. நிலவாய் என்னைப் பார்த்துகொண்டே என்னுடன் வருவதும் நீ.. ஆயிரம் காயங்கள் நான் உனக்கு தந்தும், அயராது என்னை நேசிப்பதும் நீ.. ஆயிரமாய் நீ இருப்பினும், நீ என்னுடன் இருக்கிறாய் என்ற எண்ணமே, என்னை வாழ வைக்கும்..!! உன் தெய்வீக மனதிற்கு பூக்களை வர்ஷிக்க தான் எண்ணினேன் முட்களால் வருடி இருந்தால் மன்னித்துவிடு..!! இனிய நன்பர்கள் தின வாழ்த்துக்கள்..!!

Cleaning Myself..!!

Image
Big mouth & sensitivity are bad seeds.. Its time to clean me And plant a Good Sapling..!!

LoVE Is!!

Image
Do I want to say anything more than the picture :) Love is when you push yourself to the extreme for anything that is related with the one you love..!!

என்ன உலகம்டா இது..

Image
காலைல  சன் மியூசிக்ல பப்பா பா பா.. வருதே எனக்கு பாப்பா பாட்டு பாத்துட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாதஸ்வரம் சத்தம். ரொம்ப வயசான ஒருத்தர் பழைய சோக பாடல்களை நாதஸ்வரத்துல ஒவ்வொரு வீடு முன்னாடி நின்னு வாசிச்சிட்டு இருந்தார். ரொம்ப வயசானவர்ங்க்ரனால அவரால தம் பிடிக்க முடியல, தம்னா அந்த தம் இல்லைங்க, மூச்சு. பாவம் அதுலையும் கஷ்டபட்டு அழகா வாசிட்டு இருந்தார். காசு கொடுக்க போறோம்னா கொடுத்திடனும், இல்லேனு முடிவு பண்ணீட்டா அட்லீஸ்ட் இல்லேனாவது சொல்லனும். யாரும் எதும் சொல்லல, பாவம் அவர் ஒவ்வொரு வீடு முன்னமும் நின்னு கஷ்டபட்டு மூச்ச பிடிச்சு வாசிட்டு வெரும் கையோட போறாரு. வாழ்ற காலம் என்ன காலம்னு புரியல, இல்லாதவர்க்கும் சரி இருக்குறவனுக்கும் சரி காசு பெரிய விஷ்யமா தான் இருக்கு.  மனுஷங்க  கொஞ்சம் கொஞ்சமா மிருகமா மாறீட்டாங்க, இப்பலாம் மிருகம் மனுஷன விட அன்பா பண்பா நடந்துக்குது.. என்ன உலகம்டா இது..

நட்பு

இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே தோழன் என்ற சொந்தம் ஒன்று தோன்றும் நமது உயிரோடு நமது மேஜையில் உணவுக் கூட்டனி..... அதில் நட்பின் ருசி அட வாழ்க்கை பயணம் மாறலாம்..... நட்பு தான் மாறுமா? ஆயுள் காலம் தீர்ந்த நாளில்..... நண்பன் முகம் தான் மறக்காதே!

Shiny's Mom

It was soooooooo long back when I was heading back home from chennai. I have realized whenever wherever I go lonely, God will send some Angel for me :) And that was an afternoon, I came with my big baggy to tambaram bus stand alone. I was standing there blinking at everything. Then came a bus and I wondered whether this will go to my city.. I already had an experience of getting on a bus that covers many places and finally gets to my home and got down immediately so was just a bit thinking about that and at last made my mind and took my bag and went to the conductor and asked him about the route. He was so in a hurry to get me in, than in explaining me. But I was very patiently asking him about the direct route, on noting this, the driver answered me yes its direct route and you can get in. I then got in the bus. It was almost crowded and Thank God, only one place left near a woman who was 3 seats away from the driver. I spotted the place and went near her and asked, "Is someone ...