தொட்டில் மேல நடுவுல ஒரு பொம்மை சுத்தீட்டே இருக்கும், அது ஏன்னா..
சின்ன குழந்தையோட தொட்டில் மேல நடுவுல ஒரு பொம்மை சுத்தீட்டே இருக்கும், அத கண்டிப்பா ஏதோ சம்பரதாயம் மாதிரி கட்டீடுவாங்க. அது ஏன் கட்டுறாங்கனா,
மனுஷனுக்கு படைச்ச ஒவ்வொரு உறுப்பையும் அவன் பயன் படுத்த படுத்த தான் அது இயங்குற மாதிரி, நல்லா உருவாகுற மாதிரி கடவுள் அவன உருவாக்கி இருக்கார். அதும் சின்ன குழந்தைங்க வளர்ற பருவம், அந்த குழந்தைங்க கண்ணு நகராம ஒரே இடத்தை பாத்துட்டே இருந்தா, கண் சரியா வளர்ச்சியும் அடையாது, இயங்கவும் செய்யாது. அதுனால அந்த சுத்துற பொம்மைய கட்டீடுவாங்க.
சின்ன குழந்தைங்கள தொட்டில்ல போட்டதும் அந்த பொம்மைய பாத்துதான் ஆகனும் ஏன்னா கண்ணு முன்னாடி அது தான் இருக்கும்.. அந்த சுத்துற பொம்மை எப்டி இருக்கும்னா, அந்த குழந்தைக்கு பிடிச்ச கலர் இல்லேனா டெட்டி பியர், இல்லேனா பூ போல வித விதமா இருக்கும்.. அந்த குழந்தை தொட்டில்ல இருக்கும்போது அந்த சுத்துற பொம்மைல தனக்கு பிடிச்ச பொம்மைய அல்லது அது சுத்துறத பாக்கும். அப்டி பாக்கும்போது கண் விரிஞ்சி கரு விழி சுத்தி வரும். அப்டி சுத்துறது தான் கண்களுக்கு எக்செர்சைஸ்.
அதனால தான் சின்ன குழந்தைங்க தொட்டில்ல அந்த சுத்துற பொம்மைய கண்டிப்பா கட்டனும்..
Why they tie a rotating doll in child's cradle?
Humans who use their every organ, develops and maintains it.. This is the way God has made man. So as the baby should use her organs to develop. For the baby's eyes to develop, the eye exercise that is opening up the eyes and rotating it completely should be given to the baby. Since we can't make it, we tie a rotating doll that comprises of different dolls in it. The baby in the cradle can see the rotating doll alone and will either lock her eyes in the rotation or in one of the doll it likes and so the baby's eyes rotate along and hence the exercise..
So every cradle must be tied with the rotating doll for the sake of baby's eyes..
Comments
Post a Comment