For My Friends!!


உலகில் அனைத்தும் அன்னியமாய் தோன்ற,
நான் பாதுக்காப்பாய் பிடித்துக்கொள்ளும் கட்டை விரல் நீ..

உலகின் சோகங்கள் என்னை பயமுருத்தும்பொழுது,
ஓடி நான் என்னை ஒளித்துக்கொள்ளும் முந்தானை நீ..

குழம்பிய குட்டையாய் நானிருக்க,
என்னுள் மிக சிறந்த மீனை பிடித்து காட்டியது நீ..

ஆயிரம் மக்கள் உள்ள கூட்டத்தின் நடுவில் தொலைந்தவளாய் நின்ற என் தோளில்,
கை போட்டு வா போகலாம் என்றது நீ..

உச்சியில் இருந்து பின்னோக்கி விழ இருந்த என்னை ிடித்து,
ஏறு நான் இருக்கிறேன் என்றது நீ..

அமைதியின் மடியில் இசையாய் என் காதில் ஒலிப்பதும் நீ..
நிலவாய் என்னைப் பார்த்துகொண்டே என்னுடன் வருவதும் நீ..

ஆயிரம் காயங்கள் நான் உனக்கு தந்தும்,
அயராது என்னை நேசிப்பதும் நீ..

ஆயிரமாய் நீ இருப்பினும்,
நீ என்னுடன் இருக்கிறாய் என்ற எண்ணமே,
என்னை வாழ வைக்கும்..!!

உன் தெய்வீக மனதிற்கு
பூக்களை வர்ஷிக்க தான் எண்ணினேன்
முட்களால் வருடி இருந்தால்
மன்னித்துவிடு..!!

இனிய நன்பர்கள் தின வாழ்த்துக்கள்..!!




Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்