சொர்கம்னா அது வானம் தான்!
அதிகாலை எந்திரிச்சு பல்லு வெலக்கி முகம் கழுவுனேன்
ஜன்னல் வெளியா பாத்தா வானம் பிங்கும் வைலெட் நிறத்துலையும் ஜொலிச்சுகிட்டு இருந்துச்சு.
அடடா இப்படி ஒரு அழக பாக்கனுமேனு உடனே மேல் மொட்ட மாடிக்கு கிளம்பீட்டேன். போய் கீழ உக்காந்து
முட்டிய மடக்கி முட்டி மேல கைய வச்சி பின்னாடி குட்டி சுவருல சாஞ்சிகிட்டு வானத்த பாத்துகிட்டே
இருந்தேன். என்ன
அழகு! இன்னும் சூரியன் வெளிய வரல. அதோட வெளிச்சம் மட்டும் மேகத்து வெளிய கொஞ்சமா வந்து,
பக்கத்துல இருக்குற மேகங்கள்லாம் பின்கிஷ் ஆரஞ்சு நிறத்துலையும் அத தொட்டு நின்ன வானத்தோட
நிறம் வெளிர் வைலெட்லையும்
அதை தாண்டி இருந்த வானமெல்லாம் வெளிர் ப்ளுலையும் அதுல படர்ந்திருந்த மேகமெல்லாம் பிங்க்
நிறத்துலையும் அழகா இருந்தது. சூரியன் இன்னும் வராததால வெயில் அடிக்கல, கோடைகால அதிகாலையா
இருந்ததால இதமான குளிர் இருந்தது. இதான் சொர்கமானு நான் நினைச்சு வியந்து பாத்துட்டு
இருக்கும்போது வெள்ளை தேரை 5 செட்டா அந்த வண்ணம் தீட்டப்பட்ட அழகு வானத்துல பறந்து
போகுது. அந்த வெள்ளை தேரையை ஒவ்வொரு வண்ண பேக்ரவுண்டுல பறக்குற கோலத்த பாக்க
என்ன அழகா இருந்தச்சு! அடடா! என்ன உலகம் டானு! நினைச்சுட்டு இருக்கும்போது கீச் கீச்சுனு 3 கிளி செட்டா பறந்து போகுது.
என் கண்கள் பத்தல அந்த அழகெல்லாம் அள்ளிக்க, என்ன
அருமையான வாழ்க்கைன்னு வியப்படைய தான் முடிஞ்சுது. எனக்கு கண்கள் கொடுத்ததுக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல தோணுன
அப்போதான்
கண்கள் இல்லாதவங்க எவ்ளோ தினம் தினம் இழக்குறாங்க ஆனா நமக்கு எல்லாம் இருந்தும் இத தினம் தினம் ரசிக்காம
தவர விடுறோமேனு தோணுச்சு. கடவுள் படச்ச வானத்துல நம்ம இன்னும் கைய வைக்காம இருக்குறதால
தான் இன்னும் அது படைக்க பட்ட அழகோட இருக்குனு தோணுச்சு, பூமியும் ஆரம்பத்துல இப்படி
ஒரு சொர்கமா தான் இருந்திருக்கனும். கண்ணில்லாதவங்களுக்கு கண்கள் தானம் செய்யனும்,
நம்ம இருக்குறப்போ அவங்கள சந்திக்க நேர்ந்தா அவங்களுக்கு கண்ணில்லைங்கிற குறை இல்லாம
நம்ம எல்லா அழகையும்... சொல்லாலையோ, செயலாலையோ, அன்புலையோ இல்ல உதவிலையோ காட்டனும்.
Comments
Post a Comment