அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா!!
வெள்ளி கிழமை கிலாஸ் கொஞ்சம் சீக்கிரமா முடிஞ்சிருச்சு, என் கூட படிக்கிற பொண்ணு
ரெண்டு வாரம் வரமாட்டாங்கிறதால கூட ரெண்டு யூனிட்ட நடத்த சொல்லீட்டா, சரி கவனிச்சிட்டு
போகலாம், "என்ன வீட்ல தேடப்போறாங்க"னு சொல்லீட்டே உக்காந்து கவனிச்சேன். வீட்டுக்கு
வர நேரம் ஆகும்னு சொல்லலாம்னு நினச்சேன், ஆனா மொபைல் கொண்டு போகாததால வேற யார்ட்டையும்
கேக்க வேண்டாம்னு நினச்சதால, சரி வீட்டுக்கு தான் போய்டுவோம்லனு விட்டுட்டேன். கிலாஸ்ச
முடிச்சிட்டு வர்ர வழில கடைல சொல்லிவிட்ட பொருள்ல்லாம் வாங்கீட்டு பொறுமையா வீட்டுக்கு
1.30 மணி நேரம் கழிச்சி வந்தா... எங்க அம்மா எங்க அப்பாக்கு கால் பண்ணி சொல்லீட்டு
மொபைலோட வாசல்ல உக்கந்து அழுதுட்டு இருக்காங்க. எனக்கு அப்போ மனசுல வந்த உணர்வ சொல்ல
முடியாது அது வலி, சந்தோஷம், அய்யயோ சொல்லீர்க்கலாமேனு சங்கடம், அம்மாக்கிட்ட, வந்துருவேன்லமானு
சொன்னேன், பயமா இருக்குல நீ தனியா வண்டி ஓட்டீட்டு போறனு சொன்னாங்க, அப்போ தான் முடிவு
பண்ணேன் இனி இப்படி நடந்துக்ககூடாதுனு. இப்படி பட்ட அம்மாக்கு நான் எந்த சந்தோஷமும்
தரலனு நினச்சா ரொம்ப வலிக்குது, எனக்கு ஏன் இப்படி ஒரு விதி, இறைவா இன்னைக்கி நான்
எடுக்குற முடிவுகள் நாளைக்காவது என் குடும்பத்துக்கு ப்ரயோஜனமா சந்தோஷமா இருக்கட்டும்.
Comments
Post a Comment