நல்லதை வாழ்க்கையில் பயன்படுத்தும் போது??
நல்லதையே செய் எல்லார்க்கிடையும் நல்லா நடந்துகோனு
சின்ன வயசுல சொல்லி கொடுத்ததெல்லாம் வாழ்க்கைல பயன்படுத்தும் போது தப்பா போய்டுது.
பால்கார பையன் பால் போடல ஒரு நாள், போய் பால் போடலபானு சொல்லீட்டு
வந்தேன், அடுத்த நாளும் போடல, போய் பால் போடலபானு சொல்லீட்டு வந்தேன், காரணம் என்னனா
மறந்துட்டானாம், சரி இதெல்லாம் ஒரு விஷயமான்னு விட்டாச்சு, ரெண்டு நாள் சரியா
போட்டான் மூணாவது நாள் மூணாவது தடவையா போடல, கோவம் வந்துருச்சு, போய் பால் போட்டீங்களானு
கேட்டா போடலையாங்க்றான், அதெப்படி எங்க வீட்ட தாண்டி போய் எல்லாருக்கும்
மறக்காம போடறான் எங்க வீட்டுக்கு மறக்குறானு கடுப்பாச்சு, கேட்டா மறந்துட்டேன்னு சிரிசிட்டே
சொல்றான், போடாம விட்டுட்டோமே இது முதல் தடவ இல்லையேனு ஒரு சின்ன உணர்வு கூட மனசுல
இல்ல.
கேட்ட நேரம் பால் காசு வாங்கீட்டு போலாம், பால் போடலேனா திட்டமாட்டோம் சண்டை
போடமாட்டோம், இப்டி நம்ம நாகரீகமா நடந்துகிட்டா அவங்க அத
தப்பா பயன்படுத்திக்க தான் பாக்குறாங்க. வந்த கோவத்துக்கு எனக்கு இப்டிலாம் கேள்வி
கேக்கலாம்னு தோனுச்சு ஆனா மூஞ்சிய உர்ருனு வச்சிட்டு வந்துட்டேன்.
Comments
Post a Comment