என்ன உலகம்டா இது..
காலைல சன் மியூசிக்ல பப்பா பா பா.. வருதே எனக்கு பாப்பா பாட்டு பாத்துட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாதஸ்வரம் சத்தம். ரொம்ப வயசான ஒருத்தர் பழைய சோக பாடல்களை நாதஸ்வரத்துல ஒவ்வொரு வீடு முன்னாடி நின்னு வாசிச்சிட்டு இருந்தார். ரொம்ப வயசானவர்ங்க்ரனால அவரால தம் பிடிக்க முடியல, தம்னா அந்த தம் இல்லைங்க, மூச்சு. பாவம் அதுலையும் கஷ்டபட்டு அழகா வாசிட்டு இருந்தார்.
காசு கொடுக்க போறோம்னா கொடுத்திடனும், இல்லேனு முடிவு பண்ணீட்டா அட்லீஸ்ட் இல்லேனாவது சொல்லனும். யாரும் எதும் சொல்லல, பாவம் அவர் ஒவ்வொரு வீடு முன்னமும் நின்னு கஷ்டபட்டு மூச்ச பிடிச்சு வாசிட்டு வெரும் கையோட போறாரு.
வாழ்ற காலம் என்ன காலம்னு புரியல, இல்லாதவர்க்கும் சரி இருக்குறவனுக்கும் சரி காசு பெரிய விஷ்யமா தான் இருக்கு. மனுஷங்க கொஞ்சம் கொஞ்சமா மிருகமா மாறீட்டாங்க, இப்பலாம் மிருகம் மனுஷன விட அன்பா பண்பா நடந்துக்குது.. என்ன உலகம்டா இது..
True
ReplyDeleteYeah :(
ReplyDelete