உறக்கமில்லா இரவுகளில், இறக்கமில்லா நினைவுகள்...
ஒரு நடு இரவு. தூக்கம் வராம ரடியோவ டியூன் பண்ணி ஹெட் செட்ல பாட்டு கேட்டுட்டு இருந்தேன். நமக்கு இசைனா ஒரு கடல் மாதிரி. முங்குனா எந்திரிக்கிறதே இல்ல. அப்பிடியே போய்கிட்டு இருந்த அந்த பயணம் டக்குனு நின்னு ஒன்னு யோசிச்சிது. என்னடானு பாத்தா, இந்த இசையை எப்படி என்னால இப்படி ரசிக்க முடியுது, அதுல எப்படி மூழ்கீட்ட மாதிரி இருக்குனு பாத்தா, நான் என்ன மறந்துட்டேங்கறது நியாபகம் வந்துச்சு.
ஒரு நாள் வாழ்க்கைல பல விஷயங்கள் நடக்கும், பல சம்பவங்கள் மனசுல பதியும், பலதையும் மனசு நினச்சிக்கிட்டே இருக்கும். ஆனா அதெல்லாம் நான் மறந்துட்டேன்.
நல்லா தூங்கும் போதும் நான் என்னை மறக்குறேன். காலைல சீக்கிரமா எந்திரிச்சு சூரியனையும், மரம் செடி கொடி, பூ, பறவைகள், ஜில்லுனு வர்ர காத்து இதெல்லாம் ரசிக்கும்போதும் நான் என்னை மறக்குறேன். இதெல்லாம் ஏதோ ஹீலிங் மாதிரி மனசுக்கும் உடம்புக்கும் புத்துணர்ச்சி கொடுக்குது.
அப்ப தான் தோனிச்சு, நாம ஏன் மனுஷங்ககிட்ட பழகும்போது மட்டும் நம்மல நியாபகம் வசிருக்கனும்னு. நாம யாரு, நம்ம கோபம் என்ன, நம்ம பார்வை என்ன, இதெல்லாம் மறந்துட்டு ஒரு நாள் அவங்களோட பழகுனா என்ன?
அப்பொழுது என் மனம் அமைதியாக சொன்னது
"காலைல எழும்பிச்சை பழம் தேச்சு குளிக்கணும். தூக்கம் வராம பெணாத்தீட்டு இருக்க..."
Comments
Post a Comment