உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்



உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லை என்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

நீ பேரளகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்திச்சென்றாய்
நான் பெண்ணாக பிறந்தத்ற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் பறவைகள் நூறு
பெண்ணே பெண்ணே

நீ இல்லை என்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லை என்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோடு உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றுமே இல்லை
பெண்ணே பெண்ணே

நீ இல்லை என்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லை என்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்