இந்திய கலாச்சாரம்
எல்லாமே மாறிடுச்சு. பழங்காலத்துல இருந்த பழக்கவழக்கங்கள் பாரம்பரியம் கலாச்சாரம் எல்லாமே மாறிடுச்சு. ஆனா அந்த சின்ன சின்ன விஷயங்கள்ல உள்ள அர்தத்த நாம பாக்காமலே அதுல உள்ள பலன உணராமலே நாம அதெல்லாதையும் நம்ம வசதிக்காக மாத்திக்கிட்டோம். இன்னமும் இது சில கிராமங்கள்ல கடைபிடிக்கிறாங்க...
பழங்காலத்துல கடைபிடிச்ச பழக்க வழக்கமும் அதோட அர்த்தமும் நான் இங்க பகிர்ந்துக்க விரும்புறேன்...
காலைல சூரிய உதையத்துக்கு முன்னாடி எழுந்திரிக்கனும்னு நாம வீட்ல சொல்றத கேற்றுப்போம்... அது ஏன்?
ராத்திரி முழுக்க நம்ம கண்கள் ஓய்வு எடுத்து, ப்யூப்பில்ஸ் இருட்டுனால இரவு முழுதும் விரிஞ்சி இருக்கும். சூரியன் உதிச்ச பிறகு எழுந்தா, அந்த ப்யூப்பில்ஸ் வெளிச்சத்துக்கு தகுந்த மாதிரி உடனே தன்னை வேகமா சுருக்கும். நமக்கும் கண்ணு கூசும், சீக்கிரமா கெட்டும் போய்டும். ஆனா சூரியன் உதிக்கிறதுக்கு முன்னால எழுந்தா, கடவுள் மெல்ல சூரிய வெளிச்சம் உலகத்துக்கு வர்ற மாதிரி படச்சனால, அதுக்கு தகுந்த மாதிரி மெதுவா ப்யூப்பில்ஸ் தன்னை சுருக்கும், கண்ணும் கெடாம பல ஆண்டுகள் நல்ல பார்வையோட நல்லா இருக்கும்...
Comments
Post a Comment