நான் ரசித்த முதல் ஆல்பம் சாங்


நான் ரசித்த முதல் ஆல்பம் சாங். இந்த பாடலோட இசையில ஒரு புதுமையான ஃபோக் ஸ்டைல் இருக்கு. அதுக்கு ஏத்த குரல், சுபா அவங்களத் தவிர வேர யாரையும் போட்டிருக்க முடியாத படி அழகா இழையோடீர்க்காங்க. படமாக்கப்பட்ட விதமும் நல்லா இருந்தது. பொதுவா பெண்களை காற்ற மாதிரி இல்லாம புதுசா இருந்துது, அதுக்கு ஏத்த பக்குவமான முகம் மற்றும் தோற்றம் அந்த பெண்ணுக்கு. எனக்கு ரொம்ப பிடித்த பாடல்...





வால்பாற வட்டப்பாற
மயிலாடும்பாற மஞ்சப்பாற
நந்திபாற சந்திப்பாற
அவர் என்ன மட்டும் சிந்திப்பார
பார என்ன பார

எட்டிப் பாத்து நிப்பார
ஏங்கி ஏங்கி பாப்பார
ஏரி கர ஓரத்திலே காத்திருப்பார
இரெண்டு கண்ணம் தேன் பாற
விண்டு விண்டு திம்பார
வால்பாற வட்டபாற
மயிலாடும் பாற மஞ்சப் பாற
பார என்ன பார

செம்பருத்தி நெஞ்சார சம்மதத்த கேப்பார
சாதிசனம் சேந்திருக்கக் கைப்புடிப்பார
வம்பளக்கும் ஊர் வாய்ய வாய்யடைக்க வைப்பார
வால்பாற வட்டபாற
மயிலாடும் பாற மஞ்சப் பாற
பார என்ன பார

தொட்டா மணப்பாரே நெய் முறுக்க கேப்பார
நெய் முறுக்கு சாக்கிலயே கை கடிப்பார
பால் இருக்கும் செம்பாக பசி தாகம் தீர்ப்பார
வால்பாற வட்டபாற
மயிலாடும் பாற மஞ்சப் பாற
பார என்ன பார
பார...

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்