கருத்து


எதை பற்றியாவது கருத்து சொல்லலாமென்று நினைத்தால் எனக்கு எதிலும் நிலையானக் கருத்துக்கள் இருப்பதில்லை. குழந்தைகளை தொழில்களில் ஈடுபடுத்துவது கொடுரம் என்றும் நினைப்பேன், சம்பாத்தியம் இல்லா வீட்டில், உணவை விட படிப்பு பெரிதில்லை என்றும் நினைப்பேன். காதல் இல்லை என்பேன், வாழ்க்கையின் ஓட்டத்தில் யாரேனும் அதை உணர வைத்தால் ஒரு நிமிடம் நின்று இருக்குமோ என்றும் சந்தேகிப்பேன். சில நேரங்களில் சிலரின் சந்தோஷத்திற்காக என் கருத்துகளை மறைக்கவும் செய்வேன். ஒவ்வொருவருக்கும் சரி தவறு என்பது மாறுப்பட்டுகொண்டே இருப்பதால், இரக்கம் கொண்டு வாழ்தலே சிறப்பும் எளிதுமாயிருக்கும் என்று எண்ணுவேன். ஆனால் நாம் தவறான விஷ்யங்களில் இரக்கம் காட்டலாகாது என்றும் நினைப்பேன். நான் செய்யும் எந்த ஒரு காரியமும் பிறரை காயப்படுத்தவில்லை என்றால், அதுவே சரி, நான் சிரிக்கும் சிரிப்பும் கூட ஒருவரையேனும் காயப்படுத்திவிட்டால் அது தவறு என்றும் நினைப்பேன், ஆனால் எல்லா நேரமும் எல்லாருக்கும் சிரிப்பை தர முடிந்தால் நான் சரியாகவே இருக்கிறேன் என்று சொல்லமுடியாது.

இவ்வளவும் என்னை குழப்பிகொள்ள வருவதில்லை. ஏனெனில், ஒரு விஷயத்தில் மனம் பதிந்துவிட்டால் நான் எதையும் சரியாகவே அதை நோக்கியே செய்வேன் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை..





மனசாட்சி: ஷபா.. ஏன் இப்டி கொல பண்ற..

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்