என்ன உறவு பிணைப்பு?


சில நேரங்கள்ல சரினு நெனச்சு செய்ற விஷ்யமும், ஒரு நாள்ல சந்தோஷமா தோன்றின விஷ்யமும் காலப் போக்குல தப்பு, துக்கம்னு மாறீ கடுப்பகெலப்புது.. அட்லீஸ்ட் நல்லவங்களுக்காவாது அது நல்லதா அமஞ்சா சரி அதுகூட இல்லேனா நாட்ல ஏன் நல்லவங்களா இருகோம்னே தெரியமாட்டேங்குது..

எங்க வீட்ல ஒரு பூனை 5 ஆஷ் கலர் குட்டியும் இன்னொரு பூனை 1 கருப்பு 1 அஷ் குட்டியும் போட்டிருக்கு. நாங்க சொந்தமா வளக்கல வெருமன பசிச்சா சாப்பாடு தான் போட்றோம்னு இருந்தாலும், இன்னைக்கு அந்த 5ல ஒரு குட்டி பக்கத்து வீட்டுக்குள்ள எப்படியோ போய் பாவமா கத்துச்சு, அது எங்க டா இருக்குனு தேடி போய் பாத்தா பாவமா பாத்துச்சு வீட்டுக்கு வழி தெரியாம, அது கண்ணெல்லாம் ஒரே கண்ணீர்.

எங்கிட்ட அது வந்து பழக்கமில்ல நான் போனா ஓடீடும், ஆனா எனக்கு அங்க இருந்து நகர மனசில்ல, அதோட தாய் அதெல்லாம் கண்டுக்காம சாப்ட்டுட்டு இருக்கு. போய் பக்கத்துவீட்டை தொந்தரவு பண்ணி எப்படியோ அத கூட்டீட்டு வந்து உட்டா வேகமா ஓடி போய் அதோட இடத்துல ஒலிஞ்சிக்கிச்சு.

அதோட அம்மாக்கு அது மேல அக்கரையே இல்ல, அது பாவமா இருக்கு, நான் இப்டி இருக்கேன் எங்கிட்ட அது ஒரு நாளும் வராது.. இது என்ன உறவு பிணைப்புனு எனக்கு புரியவே இல்ல..

குடிகாரன் மனைவி நல்லவங்களா இருக்காங்க, அக்கறை இல்லாதவங்க புருஷன் நல்லவனா இருக்கான்.. எப்பவுமே வாழ்க்கைல சரியான உறவு அமையாது போல..


Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்