காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்..


இன்று காதலைப் பற்றி கிறுக்க காரணம், சில ஆண்டுகளுக்கு முன் சில ஆண்டுகளுக்கு பின் என்று எனக்கு நன்கு தெரியாத சில மனிதர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது எனக்குள் எழுந்தது சில எண்ணங்கள்..


காதலில் இரண்டே விதமான மனிதர்கள் தான்.. ஒன்று காதலிக்கிறோம் என்று உணர்ந்து செய்பவர்கள் மற்றொன்று உணராமல் செய்பவர்கள். உணராமல் செய்பவர்கள் வாழ்க்கையின் ஓட்டத்துடனே ஓடிவிடுகிறார்கள். உணர்ந்து செய்பவர்கள் அவர்கள் விட்டுச்சென்ற இடத்திலேயே தங்கிவிடுகிறார்கள். காதலில் கடவுளை பழிக்க எதுவும் இல்லை. காதலிப்பவர்கள் எதை செய்ய விரும்புகிறார்களோ அவையாவும் அவர்களுக்கு கொடுக்கபடுகின்றது. காதலித்தால் போதும் என்றவர்களுக்கு காதல் கிடைக்கப்பெறுகின்றது, பீச், படம், செல்ல விரும்புவோர் செல்கிறார்கள், அவளை/அவனை வெறுக்க வேண்டும் என்று முயல்பவர்கள் ஒரு கட்டத்தில் வெறுக்கவும் செய்கிறார்கள், திருமணம் செய்ய விரும்பியவர்கள் திருமணம் செய்கிறார்கள், சாக்கு போக்கில் பயத்தில் சந்திப்பதில் இருக்கும் ஈடுபாடு சேர்ந்து வாழ்வதில் இல்லாததால் சேராமல் விட்டவர்களும் உண்டு. இதில் உண்மையாய் காதலித்தவன் வாழ்க்கையை கடக்க கஷ்டபடுகிறான், வாழத் திணருகிறான், உணராமல் காதலித்தவன் வாழ்க்கையின் ஓட்டத்தில் ஓடுகின்றான், வேறு வேலையை பார்க்கின்றான்.



சரியாய் காதலிப்பது மட்டும் முக்கியமல்ல சரியானவர்களை காதலிப்பதும் முக்கியம்..



#No offense to all lovers..

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்