என்ன உறவோ என்ன பிரிவோ
ஒரு ரெண்டு மூனு நாள் முன்ன அம்மா நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்தாங்க, அப்போ
ஒரு லைன் சத்தமா படிச்சாங்க, நயந்தாரா பிரவு தேவா திருமணம் எப்போ. நான் சொன்னேன்,
ஒரு மனுஷன் திருமணத்த பத்தி பேசாம இருக்கான்/தள்ளி போட்றான்னா யோசிக்க வேண்டாம்?னு.
என் அம்மா சொன்னாங்க ச்ச நீ ஒரு புக் எழுது டி, இதெல்லாம் தெரியாம தான் எல்லாரும் எமாந்திர்றாங்கனு.
என் மகள எமாத்த ஒருத்தன் எப்போ வர போறானோ தெரியலையேனு முடிச்சிட்டாங்க.. எங்க அப்பா
விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க.
எனக்கு ஒரு பக்கம் காமெடியா இருந்தாலும் இன்னொரு பக்கம் கஷ்டமா இருந்துச்சு..
Comments
Post a Comment