Random Thoughts
ஒவ்வொரு முறையும் உணவை உண்ணும் முன் அதை விளைவித்த
விவசாயியை நினைப்போம்.
ஒரு காலத்தில் காதல் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவன்
இன்று சோகக் கவிதைகளை எழுதுவான்
அல்லது கோபக் கவிதைகளை எழுதுவான்..
நேற்று சிரித்து இன்று அழும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன்
நாளை சிரிப்பேன்
என்று.
காற்றை பிடித்தால், தென்றலையும் பிடிக்கணும் புயலையும் பிடிக்கணும்.
எதையாவது மாற்ற வேண்டும் என்றால் நான் என்னைத்தான் மாற்றிக்கொள்ள முடியும்.
அன்பாக இருப்பதே நான் செய்ய முடிந்தது.
தேவையற்ற
இடத்தில் தேவையற்ற மனிதரிடத்தில் நான் செய்யும் தேவையற்ற செயல் எனக்கு தேவையுள்ளவர்களை
காயப்படுத்தும்..
எது சரி
எது தவறு என்று யோசிப்பதை விட எது தேவை எது தேவையற்றது என்று யோசிப்பது சுலபம்.
பூக்களை
ரசிக்க வந்தேன்
முட்கள்
என்னை தடுக்கவில்லை.
வாழ்க்கையில்
ஒவ்வொன்றிர்க்கும் ஒவ்வொரு காலம் உண்டு.
சில விஷ்யங்களை பேசக் கூடாது, அனுபவிக்கணும்.
இந்த உலகத்துக்கு
வந்து நமக்கு கிடைச்சது எல்லாம் இந்த உலகத்துக்கே சொந்தமானது நமக்கு சொந்தமானது இல்ல.
எதை செய்தாலும் மனதார செய்து பாருங்கள்.
அதில் கிடைக்கும் சந்தோஷமும் திருப்தியுமே தனி.
பிறர் உன்மேல் பலமான கற்கள் வீசீனால் எழும்ப முடியாமல்
துவண்டுவிடாதே. அவற்றை கொண்டு உன் கட்டிடத்தை எழுப்பு. உன் கட்டிடம் பலம் கொண்டதாயிருக்கும்.
ஒரு விஷயத்த நமக்கு பிடிக்கனும்னா அது நமக்கு நல்லது செஞ்சிருக்கனும்,
காயப்படுதீர்க்க கூடாதுனு அவசியம் இல்லை.
#காலை எழுந்தவுடன் கடித்தல்..
நியூட்டனுக்கு அப்பறம் யாரும் ஏன் யோசிக்கிறது இல்லன்னு
இப்பதான் தெரியுது..
Comments
Post a Comment