உறவுகள் விடுகதை
வாழ்க்கைல பலருக்கு ஒரு விஷ்யம் செய்யும்போது சரியா செய்றோமா தப்பானத செய்றோமானு
புரியுறதில்லை, இதுல நானும் விதிவிலக்கில்ல. ஆனா காலங்களும் மனிதர்களும் அத புரிய வைப்பாங்க,
நம்மளுக்கா புரியனும் இல்ல சொல்லும்போது புரிஞ்சிக்கனும், இல்லாம காலம் உணர்த்தும்
போது புரிஞ்சா நம்ம வாழ்க்கைல மதிப்பீட முடியாத பல அருமையான விஷ்யங்களையும் உறவுகளையும்
தொலச்சிருப்போம், வலியோட அத கத்துக்க வேண்டி இருக்கும்..
இதுனால தான் பெத்தவங்க நம்மகிட்ட பல விஷ்யங்கள சொல்வாங்க, அவங்க சொல்றத நம்ம
ஏத்துக்கிறதும் இல்ல, அதுல நியாயம் இருக்குனு உணரதும் இல்ல, நம்மலா பட்டு தெரிஞ்சிக்கிற
வரைக்கும்.
வாழ்க்கையோட பெரிய முட்டாள்தனம் என்னனா, கடவுளும் சரி மனிதனும் சரி, யாரு நமக்குனு
யோசிச்சு யோசிச்சு நமக்கு பிடிச்சத கொடுக்குறாங்களோ அவங்கள நம்ம மதிக்கவே மாட்டோம்,
யாரு இந்த வட்டத்த விட்டு வெளிய இருக்காங்களோ அவங்ககிட்ட ரொம்ப பொருமையா அன்பா நடந்துக்குவோம்.
உறவுங்கிறது நம்மல மறந்து நமக்கு பிடிச்சவங்களுக்கு பிடிச்சதை செய்றது. நமக்கு பிடிச்சத மட்டுமே
செய்றதுக்கு நம்ம உறவுக்குள்ள இருக்க வேண்டிய அவசியம் இல்ல..
Comments
Post a Comment