வாழ்க்கைய பற்றிய ஒரு அற்புதமான பாடம்..


அடிகடி தலை வலிக்குதேனு காலைல டாக்டர்ட்ட போயிருந்தேன். அங்க முன் வலது பக்கதுல தலையே இல்லாம ஒருதர் வந்திருந்தார். அத பாத்ததுக்கப்பறம் வீட்டுக்கு திரும்பி வந்திரலாம்னு தோனீடுச்சு..

பாவம் அவருக்கு ஒரு பக்கம் முன் பகுதில தலையே இல்ல, தல்லாடுறார், அவருக்கு இறங்குன பேண்டைக்கூட அவங்க மனைவி தான் ஏத்தி விடுறாங்க, ரெண்டு பேர் அவர் ரெண்டு பக்கம் இருந்து பிடிச்சிக்கிட்டு ஒவ்வொன்னா சொல்றாங்க, அவர் செய்யுறார்.

வாழ்க்கைல அற்ப விஷ்யத்துக்காக ஒரு பக்கம் நம்ம போராடீட்டு இருக்கும்போது அதே நேரம் உலகத்தில இல்ல நம்ம தெருக்குள்ளையே உயிரோடையும் வாழ முடியாம உயிரும் போகாம நடுவுல தினம் தினம் செய்யுற ஒவ்வொரு விஷ்யத்திற்கும் சிரமப்பட்டு வாழ்க்கைய ஓட்டீட்டு இருக்காங்க..

வாழ்க்கை ரோம்ப அற்புதமானது. உங்களுக்கு தான் வாழ்க்கைல கடவுள் பெரிய கஷ்டத்த கொடுத்திருக்கிறார்னு நீங்க நெனச்சா ஒரு நாள் மருத்துவமனைக்கு போய்ட்டு வாங்க. உங்க கிட்ட எவ்வளவு இருக்குனு புரியும்.

நான் வாழ்க்கைல கத்துகிட்டது.. வாழ்க்கை நமக்கு தர்றத அப்படியே சிரிச்ச முகத்தோட ஏத்துகிட்டு போய்ட்டே இருக்கனும்..

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்