எந்த நிறம் இருந்தாலும்..


வெள்ளை நிறத்தில் ஒரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றது அப்பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி
கரும் சாந்து நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் அது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?

இந்த பாட்ட நான் இப்போ போட காரணம் இருக்கு, எங்க வீட்டுல இந்த கதை தான்.. சாம்பல் நிறமொரு குட்டி, கரும் இருட்டின் நிறமொரு குட்டி. ரெண்டுத்துக்கும் எனக்கு வித்தியாசம் தெரியுறதில்ல. இந்த விஷயத்துல இந்த மனசோட இருக்குறதுக்கு நான் சந்தோஷப் படறேன்.

இப்போ வந்து விளையாடிட்டு போன என் பூனை குட்டிக்காக இந்த பாடல் இல்லை, நிறத்த பெருசா மதிச்சு மக்கள் மனச காயப் படுதீடாதீங்கனு பாரதியார் சொல்றாரு அதா நான் சொல்றேன்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்