How do I motivate myself? Check in..
மொதல்ல ஏன் நான் என்ன மோட்டிவேட் பண்ணனும்?
ஏன்னா வாழ்க்கைல ஏற்ற தாழ்வுகள் சகஜம். சோர்ந்து
போறது இயற்க்கை. அந்த மாதிரி சமயத்துல வேண்டாம் வேண்டாம், செய் செய், விற்று விற்றுனு நான்
என்னையே மோட்டிவேட் செய்துகிறது உண்டு. அதுக்கு ஒரு உதாரணம் தான் நான் இங்க சொல்லப்
போறேன்.
நான் ஒரு பயங்கரமான பயன்தான்கோலி, ஆனா இந்த விஷயம்
என்ன தவிர வேற யாருக்கும் தெரியாது. அதுலயும் இருட்டுல தனியா இருந்தா பயத்துலையே என்
இதயத் துடிப்பு தட்டி விட்ட குதுரை மாதிரி ஓடும். ஒரு ராத்திரில நான் எந்திரிச்சி இன்னொரு
ரூம் லைட்டை போடனும்னா அதை போடற வரைக்கும் என் மனசு திக்கு திக்குங்கும்.
என் சின்ன பிள்ளைல யாரோ வெளிச்சத்துல பேய் இருக்காதுன்னு
சொல்லிகொடுத்தத நான் இப்ப வரைக்கும் நம்பி லைட்டை போட்டா பேய் போய்டும்னு நம்புவேன்.
நான் ராத்திரில எந்த ரூம்க்கு போனாலும் அங்க லைட்டை போட்டுகிட்டே போவேன். அப்படி இருட்டுக்குள்ள
இருந்து லைட்டை போட போற வரைக்கும் நான் என்ன மோட்டிவேட் செஞ்சுதான் ஆகணும்.
அப்போ நான் என்ன செய்வேன்னா, சுவிட்ச் இருக்குற திசைய
நோக்கி "இன்னும் கொஞ்சம் தூரம் தான் டி போய் சுவிட்சை போற்றலாம் அப்புறம் ஒன்னும்
இல்லனு மனசுக்குள்ள சொல்லிகிட்டே போய் சுவிட்சை போற்றுவேன்". அப்புறம் பயம் போய்டும்.
இப்படி மனச ஒவ்வொரு விஷயத்துக்கும் நம்மள நாமே மோட்டிவேட்
செஞ்சுக்கணும். எதுக்கும் உடஞ்சிற கூடாது.
Comments
Post a Comment