Thursday, May 31, 2012

Save Water..!!


சமீபத்துல நான் கேட்ட ஒரு நல்ல விஷயம் பகிர்ந்துக்க தோணுச்சு, இது ஒரு கல்லூரியில உருவாக்கப்பட்ட ஒரு குறும்படம்.

ஒரு பரப்பரப்பான மாநகரத்துல விடுமுறை நாள்ல ஒரு பையன் காலைல கொஞ்சம் லேட்டா எழுந்து டீ.வி. ஆன் பண்ணீட்டு ப்ரஷ் எடுக்குறான் பல்லு விலக்க. பைப்ப திறந்து பல்லு விலக்கீட்டு இருக்கும்போது டீ.வி.ல அவனுக்கு பிடிச்ச பாட்டு வருது, அந்த பாட்டுல மெய் மறந்து கேட்டுக்கிட்டே பல்லு விலக்குறான் பைப்ப திறந்துவிட்டத மறந்து. அந்த பாட்டு முடிஞ்சு அடுத்து ஒரு குறும்காட்சி டீ.வி.ல வருது, இவன் பாடல் நின்னதும் அது என்னனு பாக்குறான், அதுல ஒரு இடத்துல பைப் இருக்கு அதுல சொட்டு சொட்டா தண்ணீர் கொட்டுது, அதுக்கு கீழ ஒரு குடம் அத சுத்தி நிறைய குடம் குடமா இருக்கு, அந்த ஊரு பெண்கள்லாம் அங்க காத்து நிக்கிறாங்க இது எப்ப நிரம்பும் நம்ம குடம் எப்ப வரும் தண்ணீர் பிடிச்சிட்டு போகலாம்னு. இந்த பையன் அத பாத்ததும் உடனே தான் திறந்து விட்ட பைப்ப மூடுறான், உடனே அந்த பைப்புல சொட்டு சொட்டா வந்த தண்ணீர் வேகமா வருது.

எவ்வளவு அழகான சுய உணர்தல் பற்றி ஒரு குறும்படம். இப்படி ஒவ்வொருத்தரும் சுயமா உணர்ந்து பிறர் பற்றிய கருத்தோட இருந்தா இன்னும் பல பேர் பலனடைவாங்க. ஏன்னா நம்ம வீணாக்குற ஒவ்வொரு விஷயமும் யாருக்கோ கிடைக்க வேண்டிய அத்தியாவசிய தேவை..



Sunday, May 27, 2012

இரக்கமில்லா இரவுகளில் உறக்கமில்லா நினைவுகள்


அன்பு வலிமை வாய்ந்தது என்று நினைத்திருந்தேன்
வலி அதைவிட வலிமை வாய்ந்தது
அன்பு கிடைக்காமல் யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை
வலி தாங்க முடியாமல் தான் தப்பிக்கப்பார்க்கிறார்கள்

Monday, May 21, 2012

மாற்றம்


ப்போதெல்லாம் 
தாகத்தை அடக்க  ண்ணீர் குடிப்பேன்
இப்போதெல்லாம் 
சோகத்தை அடக்க  ண்ணீர் குடிக்கிறேன்

Wednesday, May 09, 2012

President's Foreign Tour Expense


Just read that our president has spent 208 crore solely on her 79 days foreign tours.

I'm now calculating...... wait I'm weak at Maths..
.
.
.
Ahhhhh!!! She spent nearly 2.6 crore a day. 208 crore wasted..
If she spent this on World Vision she would have been able to sponsor 26lakh children.

Saturday, May 05, 2012

Watch the Moon Tonight


Tonight the moon will look the biggest and brightest it's been this year - 
as much as 14% bigger and 30% brighter! 
I will not miss this out :)



*~LOVE~*


I walk alone these empty streets
There is not a second you're not here with me
Never gone, never far
In my heart is where you are
Always close
Everyday
Every step along the way
Even though for now we've gotta say goodbye
I know you will be forever in my life
Never gone from me
If there's one thing I believe
I will see you somewhere down the road again


Wednesday, May 02, 2012

Optimism Vs Pessimism


Socrates, my favourite Philosopher. Many may not like philosophy but at some point of lifetime some will speak philosophy and many will agree to it.

One day when Socrates was discussing with his students downstairs, his wife from upstairs was angrily shouting at him for something. Socrates though he listened to what his wife was uttering at him but didn't pay attention to it and was discussing with his students. After sometime, his wife grew furious and poured a bucket of water on him. He said his students, "It was thundering before and now its raining". 

Life incidences shapes us. Experience is what we get when we don't get what we want.

There is a famous myth about optimism and pessimism, optimistic people are those who go forward in life and pessimistic people are those who are losers and even they can kill themselves. I don't stand on either side. For me people who promote optimism are people who love themselves more than others, they can always find something to make them happy or atleast busy. But pessimistic people are those who love others more than themselves fails in life mostly as they keep their key to happiness and peace in other's pocket. These people will have sad thoughts, they will speak philosophies. 

I'm not interested in promoting either thing, I'll just say 
Be What You Are,
Live What You Feel, 
Be With What You Love
No Optimism No Pessimism Just Realism. 


Tuesday, May 01, 2012

உயிர் Vs மண்

ஈழத் தமிழர்கள் போராட்டம்கிறாங்க, ஸ்ரீலங்கா கில்லிங் பீல்ட்ங்கிறாங்க, எனக்கும் இந்த அரசியலுக்கும் ரொம்ப தூரம் சத்தியமா ஒன்னுமே புரியல. இவங்க மனுஷங்கள கொடும படுத்துராங்கனு மட்டும் புரியுது. ஏன் கொடும பண்றாங்கன்னு கேட்டா இலங்கைல  போய் தமிழ் நாடு கொடுனு கேட்டாங்களாம். ஏன் கேட்டாங்கனு கேட்டா அது ஆரம்பத்துல  தமிழ் நாடா இருந்துசுங்கிறாங்க. நேத்து கதைலாம் யாரு நம்புவா, யாரோ இன்னைக்கி வந்து நேத்து தமிழ் நாடு இங்கிலீஷ் நாடா இருந்துச்சு நீங்க  எங்களுக்கு நாடு கொடுங்கனா கொடுபோமா?

நம்ம நாடு வேற நாடுன்னு உலகத்துல ஏதும் கிடையாது. உலகத்துல ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு வகை விளைச்சல் செழுமை இருக்கும். மனுஷங்க எல்லாரும் அத பகிர்ந்துக்க ஒவ்வொரு இடத்துக்கும் பெயர் இட்டாங்க கண்டுபிடிகிறதுக்காக. அங்க இது அதிகமா விளையும் இங்க  அது அதிகமா விளையும், அங்க இருந்து கொஞ்சம் இங்க இறக்கலாம் இங்க இருந்து கொஞ்சம் அங்க ஏற்றலாம். அப்போ எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும்ங்கற சமத்துவத்துக்காக பெயர் இட்டாங்க. இப்போ அந்த பேர வச்சிக்கிட்டு என் நாடு தேச பற்றுன்னு மனுஷன மனுஷன் போட்டு கொல்றது நம்ம முட்டாள் தனம் இல்லையா?

எல்லாரும் நான் இந்தியன் தமிழன் அவன் இவனு சொல்றத விட்டுட்டு நான் மனுஷனு சொல்ல பழகுங்க, இங்க வாழ வழி இருக்கா வாழுங்க, வழி இல்லையா எங்க இருக்கோ அங்க முறையா போங்க. போற இடத்துல உருபடியா இருங்க அங்க போய் சொந்தம் கொண்டாடாதீங்க, எங்க இருந்து வந்தீங்களோ அவங்கள பத்தி அங்க உள்ள மனுஷங்க உயர்வா நினைக்கிற மாதிரி நடந்துகோங்க. எல்லாம் தப்பு தப்பா பண்ணீட்டு கொல்றாங்க அடிகிராங்கனு சொல்றீங்க. இல்ல அங்க தப்பு நடக்குதா, வாழ முடியலையா எல்லாரும் இங்க வாங்க, நீங்கலாம் தமிழர்கள் தான, இது தமிழ் நாடு தான, இங்க வந்து சுதந்திரமா இருங்க, ஏன் எங்கையோ மாட்டி அவன் நாட்ட பங்கு கேட்டு செத்தாலும் சாவேன தவிர விட்டுகொடுக்கமாட்டேன்னு நிக்கிறீங்க? செத்தவங்களுக்கு உண்மையிலையே தெரியுமா அது முன்னாடி தமிழ் நாடா இருந்துச்சுனு? நாளைக்கு தமிழ் நாடு தமிழ் நாடாவே இருக்குமா? நேத்து இத ஆங்கிலேயர்கள் தான ஆட்சி செஞ்சாங்க? நாளைக்கி இது என்ன ஆகும்னு உங்களுக்கு தெரியுமா? இல்ல நீங்க தான் உசுரோட இருபீங்கனு தெரியுமா? ஏன் இல்லாத உரிமைக்காகவும், தெரியாத உண்மைக்காகவும், உசுரும் மானமும் போனாலும் பரவாலன்னு நிக்கிறீங்க? சாவொட ரணம் எத்தன பேருக்கு தெரியும்? இழப்போட வலி எத்தன பேருக்கு புரியும்? எதோ உரிமை சொத்து நாட்டு போராட்டம் நடக்குதுனு சாகவிட்டு வேடிக்கை பாக்குறீங்களா? இறந்தவங்கள நேசிச்சவங்க இப்போ எப்படி இருப்பாங்கனு யோசிச்சு பாத்தீங்களா? உசுரையும் மானத்தையும் கொடுத்து நாட்ட மீட்டு என்ன பண்ணப்போறீங்க? இருக்குற வரைக்கும் மனுஷனா நிம்மதியா சந்தோஷமா இருந்துட்டு போலாமே..

ஒரு தாய்கிட்ட உங்க குழந்தையோட பிணம் வேணுமா இல்ல உயிரோட எங்கள்ட்ட இருகட்டுமானு கேட்டா என்ன சொல்வாங்க, வேண்டாம் உயிரோட உங்கள்டையே இருக்கட்டும்னு தான, நீங்க மட்டும் ஏன் நம்ம தமிழர்கள் செத்தாலும் பரவல கொடும அனுபவிச்சாலும் பரவால, இலங்கைல இப்டி பண்றாங்க அப்டி பண்றாங்கன்னு படம் போட்டு காட்றீங்களே தவிர, என்னாத்துக்கு நாடு நம்ம தமிழர்கள் நல்லா இருக்கட்டும்னு ஏன் நினைக்கமாட்டேங்குறீங்க?

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...