Tuesday, July 26, 2011

பார்வை!!

வீட்டில் இருந்து வெளியே கிளம்பிய நான்
என் வீட்டு ரோஜா செடியில் ரோஜா பூத்திருப்பதை
பரிதாபமாகப் பார்த்து
'யார் இந்த ரோஜாவிற்கு முட் க்ரீடத்தை கொடுத்தது' என்றேன்

என் வீட்டிற்கு வந்த அவள்
அதை பரவசமாக பார்த்து
'யார் இந்த முட் செடிக்கு ரோஜா க்ரீடத்தை கொடுத்தது' என்றாள்
புன்னகையுடன்..!!




No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...