Monday, October 25, 2010

என் ஒவ்வொரு உணவையும்


என் ஒவ்வொரு உணவையும்
நீ உண்டபின் உண்டு ரசித்த இந்த இதழ்கள்
இப்பொழுது
ஒவ்வொரு முதல் வாய் நான் எடுக்கும் போதும்
உன்னைக் கேட்கிறதே
நான் என்ன சொல்வேன்


எப்படி வாழ்வதென...


இப்படி வாழவேண்டும் என்று கற்றுக்கொடுத்தாய்
நீ இல்லாமல் எப்படி வாழ்வதென கற்றுக்கொடுக்க மறந்துபோனாயே

உன் நினைவைச் சுற்றி சுற்றி


என்னைச் சுற்றி
உன் நினைவுகள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது
உன் நினைவைச் சுற்றி சுற்றி
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

Sunday, October 24, 2010

என்னை ஒருபொழுதும் பிரிய விடுவதில்லை


என்னை ஒருபொழுதும்
பிரிய விடுவதில்லை
உன் கரங்கள்
உன்னையே குழிதோண்டி
புதைத்து விட்டன
என் கைகள்


உள்ளுக்குள்ளே நான் வெந்துகொண்டிருக்கிறேன்


உள்ளே உனக்கு குளிரும் என்று
ஏசியை நிருத்தி வைப்பேன்
இன்று நீ
வெளியே குளிரில் சுகமாய் உறங்குகிறாய்
உள்ளுக்குள்ளே நான் வெந்துகொண்டிருக்கிறேன்


அஸ்த்தமனமாகவே இருக்கிறது...


என் விடியலை விடிய வைத்தாய்
என் இரவிலே உறங்கி இருந்தாய்
இன்று நீ நிரந்தரமாய் உறங்குகிறாய்
என் ஒவ்வொரு விடியலும்
அஸ்த்தமனமாகவே இருக்கிறது...


நான் என்ன செய்வேன்


என்ன அவசரம் உனக்கு
போகும் அவசரத்தில்
நீ
உன் உயிரை என்னிடம் மறந்து
என் உயிரை எடுத்து சென்றுவிட்டாயே
நான் என்ன செய்வேன்


Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...